Thursday, February 13
Shadow

தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

 

18 .09 .2022 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார் அருகில், அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் திரு.எஸ்.கதிரேசன் பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் திரு.விஜயமுரளி தயாரிப்பாளர் திரு.கருணாகரன் ஆகியோர் உள்ளார்கள்