காலா, தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர், ஒளிப்பதிவாளர் அருள்தாஸ்.
இவர் சமூக அக்கறையுடன் தொடர்ந்து முகநூலில் பதிவிட்டு வருகிறார்.
அவர் ஒரு பதிவில், “அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக அரசுக்கு வைத்திருக்கும் கோரிக்கையில், “இன்று காலையில் கடைகளுக்கு போய் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும் வழியில் செக்யூரிட்டி டிரஸ் போட்ட ஒருவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி சார்… ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்று கேட்டுவிட்டு பணம் கேட்க ரொம்ப கூச்சமா இருக்கு சார்…
இவரைப்போல வெளியூர்களிருந்து வந்து சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரண பணிபுரியும் பலரின் நிலை இதுதான்…(இதில் பெரும்பாலோனோர் விவசாயிகள் என்பது தான் வேதனைக்குரியது)
இவர்களைப்போன்ற ஏழைஎளியோர், முதியவர்கள் உடல் ஊனமுற்றோர் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த 21 நாள் முடியும் வரையாவது மூன்று வேலையும் அம்மா உணவகம் மூலமாக இலவசஉணவு கொடுத்து உதவினால் அவர்களுக்கு பேருதவியாகவும் தமிழகஅரசுக்கு பெரும் புண்ணியமாகவும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவில், “மருத்துவம் பற்றி எந்தவித அறிவும் இல்லாத சினிமா நடிகர் நடிகைகள் கருத்து எதுவும் சொல்லாமல் மூடிட்டு இருந்தால் நல்லா இருக்கும்..” என காட்டமாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினி, அமிதாப், மோகன்லால் உள்ளிட்டோர் கொரோனா குறித்து தவறான தகவல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினியின் பதிவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது. அமிதாப், தானே தனது பதிவை நீக்கினார். மோகன்லால் தவறா பதிவிட்டது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.