ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’.
ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, பிக்பாஸ் சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், போன்றோர் நடிக்கின்றனர்.
அதிக பொருட்செலவில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே நிறைந்த இப்படத்தில் ஜெய் ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு VISUAL EFFECTS வேலைகள் நடந்துக்கொண்டு இருப்பதாக படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஜானிலால்/வில்லியம்ஸ், எடிட்டர் ஆண்டனி, கலை மகேஷ், VFX பிரபாகரன், இசை விஷால் பீட்டர் பணியாற்றியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஐந்தாயிரம் துணை நடிகர்களோடு, பிக்பாஸ் சினேகன் போராட்டக்களத்தில் போராளியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்க, இத்திரைப்படத்தின் டிரெய்லர் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது…..