Tuesday, December 3
Shadow

Actor Shaam shares screen with Power Star Pawan Kalyan in ‘Saaho’ filmmaker Sujith’s film. 

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்.

 

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.

 

இந்த வருட துவக்கத்திலேயே விஜய்யின் சகோதரராக ஷாம் நடித்திருந்த வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

 

இதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷாம். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

 

அடுத்தததாக தமிழில் இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ஷாம். இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இன்னொரு பக்கம் தெலுங்கில் சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாம்.

 

அந்தவிதமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகராக படங்களில் நடித்து வருகிறார் ஷாம்.

 

 

 

Actor Shaam shares screen with Power Star Pawan Kalyan in ‘Saaho’ filmmaker Sujith’s film.

 

Actor Shaam embarked on his journey as an actor in the Tamil film industry as a content-driven protagonist in the film 12B’. He continued to win the hearts of audiences with his promising performances in the films like Iyarkai, 6 Mezhuguvarthigal, and many more in the league. With the right selection of scripts and characters, he has successfully completed his 20 years of filmdom with appreciation.

 

This year has been a tremendous phase for the actor, who started his film calendar with a blockbuster hit ‘Varisu’, where he performed as actor Vijay’s elder brother. His performance was lauded with positive reception.

 

Following the grand success, the actor has now completed shooting for cinematographer-turned-filmmaker Vijay Milton’s upcoming film. The postproduction work of this yet-to-be-titled movie is proceeding at a brisk pace.

 

Furthermore, the actor is simultaneously working on a couple of Tamil projects, featuring him in the lead characters. It is worth mentioning that he is now sharing the screen with Power Star Pawan Kalyan in a Telugu movie, directed by ‘Saaho’ fame Sujith.

 

Significantly, the actor is pretty busy with both Tamil and Telugu movies, with a slew of projects in the pipeline as well.