Thursday, December 5
Shadow

ஊருக்குள் கிருமிநாசினி தெளித்த நடிகர் விமல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசமான சூழ்நிலையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்தித்து வருகிறது.

எனவே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை சந்தித்து வருகிறது.

இதனையடுத்து மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கொரோனா தடுப்பு பணியில் இறங்கியுள்ளார்.

இவருடன் அந்த கிராமத்து இளைஞர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதாவது இளைஞர்களுடன் இணைந்து தெரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறார்.

விமலின் இந்த களப்பணி அந்த கிராமத்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.