உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானாவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால் மருத்துவ பணியாளர்கள் பலருக்கும் பணிச் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் பேன் (fan) என்ற படத்தில் நடித்தவர் ஷிஹா மல்ஹோத்ரா. இவர் டெல்லியில் உள்ள வர்தாமன் மஹாவீர் மெடிக்கல் காலேஜில் நர்சிங் படிப்பு படித்து டிகிரி பெற்றவர்.
திரைத்துறை வாய்ப்பு காரணமாக மருத்துவ துறை பணியை விட்டுவிட்டு நடிக்க வந்தார்.
இந்த நிலையில் கொரானா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மீண்டும் தன்னை மருத்துவ பணியாளாரக மாறி செவிலியர் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
நடிக்க வருவதற்கு முன் ஏற்கெனவே தான் பணியாற்றி வந்த அதே மருத்துவமனையில் மீண்டும் நர்ஸாக சேர்ந்து கொரானா வைரஸ் தடுப்பு பிரிவில் பணியாற்றத் தொடங்கி இருக்கிறார்.
நடிகையின் சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நர்ஸ் யூனிபார்ம் அணிந்து ஷிஹா பணியாற்றும் படத்தைத் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன் அவர், ‘நம் மக்களைப் பாதிக்கும் கொரானா வைரஸ் கிருமி ஒழிப்பில் என்னை மனமுவந்து ஈடுபடுத்திக் கொண்டேன்.
நடிக்க வந்தபோது எனக்கு ஆதரவு அளித்து ரசிகர்களுக்கு நன்றி. இப்போது என்னுடைய சேவை நோயுற்ற மக்களுக்குத் தேவைப்படுகிறது. இப்பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் ‘ எனத் தெரிவித்துள்ளார்.
சபாஷ் ஷிகா…!