விக்ரம் வேதம் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
அதன்பின்னர் அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கொரானா நோய் தடுப்பு காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வருவதற்கு முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் பறந்து சென்று வந்தாராம்.
இந்த நிலையில் இவர் பயணித்து வந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாம்.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்.
இதனால் இவர் தனி அறையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.