Monday, October 14
Shadow

Adipurush Trailer To Launch On 9th May

மே ஒன்பதாம் தேதியன்று பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில்.. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஓம் ராவத் இயக்கிய ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தின் உலகளாவிய முன்னோட்ட வெளியீட்டு விழா மே மாதம் ஒன்பதாம் தேதியன்று நடைபெறுகிறது. இதனை பான் இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபாஸ் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டு படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான இந்த பிரம்மாண்டமான படைப்பு இதற்கும் முன் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் புதிய தகவல்களுடன் வெளியிடப்படும் பிரத்யேக போஸ்டர் மற்றும் காணொளிகள், ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து படக்குழு முன்னோட்ட வெளியிட்டிற்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய அளவில் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மியான்மர், இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட உலக நாடுகளிலும் இந்த பிரம்மாண்டமான முன்னோட்டம் வெளியாகிறது. இந்த முன்னோட்டம் உலகளாவிய பார்வையாளர்களை அதிரடியான உலகிற்கு அழைத்துச் செல்வது உறுதி.‌

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யு வி கிரியேசன்ஸின் பிரமோத் – வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகிறது.

Adipurush Trailer To Launch On 9th May

Audiences to witness one of its kind day & date trailer drop simultaneously across digital platforms and theatres worldwide

One of the most anticipated films of 2023, Adipurush, is set to create history with its global trailer launch on 9th May 2023. The team drops a new poster featuring Pan-India star, Prabhas, announcing the mega launch! Directed by Om Raut and produced by Bhushan Kumar, this magnum opus has already achieved a major milestone by being selected for an an international premiere at the Tribeca Festival in New York. After making a huge feat amongst the audience with every glimpse released, the team now gears up for a magnificent trailer launch that will be watched globally as it’d not just be launched in India, but across 70 countries globally, truly marking to be a global event!

With this grand launch not only in India, but in territories across USA, Canada, Middle East, Australia, New Zealand, Asian & South Asian including Singapore, Indonesia, Thailand, Malaysia, Hong Kong, Philippines, Myanmar, Sri Lanka, Japan; Africa, UK & Europe, Russia and Egypt; this epic tale will captivate audiences and transport them into a world of adventure, drama, and action.

Adipurush, directed by Om Raut and produced by T-Series, Bhushan Kumar & Krishan Kumar, Om Raut, Prasad Sutar, and Rajesh Nair of Retrophiles, Pramod and Vamsi of UV Creations is scheduled to release worldwide on June 16, 2023.