Sunday, November 3
Shadow

Aditya Music நிறுவனம் ராம் பொத்தினேனியின் “RAPO19” படத்தின் தமிழ்-தெலுங்கு ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது !

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில், இருமொழியில் உருவாகும் திரைப்படமான ‘RAPO19’ பற்றிய ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகரகளிடம் பரபரப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தில் பிரபல நடிகர்கள் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி பினிஷெட்டி, அக்ஷரா கௌடா உடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். பல ப்ளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைப்பதால், ஆல்பத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரியதாக உள்ளது. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு இசை உரிமையை, Aditya Music நிறுவனம் பெற்றுள்ளது. தென்னிந்திய இசையுலகில் ஆதிக்கம் செலுத்தும் Aditya Music நிறுவனம், இப்படத்தின் இசை உரிமையை பெற்றிருப்பது படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் ஶ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள்.

உஸ்தாத் ராம் பொத்தினேனி ஏற்கனவே மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்து, தான் ஒரு மாஸ் ஹீரோ என்பதை நிரூபித்துள்ளார். குடும்பமாக அமர்ந்து ரசித்து கொண்டாடும் ‘Ready’ மற்றும் ரசிகர்களை மயக்கும், முழுக்க முழுக்க மாஸ் காட்டும் iSmart Shankar, , போன்று அனைத்து வகையிலும் ப்ளாக்பஸ்டர் படங்கள் தந்து, முன்னணி நடசத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். உண்மையில் அவரது நேரடி தெலுங்கு வெளியீடுகள், கடந்த காலத்தில், தெலுங்கு அல்லாத பிறமொழி பேசும் பிரதேசங்களில் கூட பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்போது உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் மூலம், அவர் அனைத்து இடங்களிலும், மிகப்பெரும் வரவேற்பை பெற்று, இந்திய அளவிலான முன்னணி நட்சத்திரமாக உயர்வார் என தயாரிப்பாளர்கள் உறுதி கூறுகின்றனர்.