சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் படப்பூஜையுடன் ஆரம்பமானது அகனள் திரைப்படம். இதை சைதன்யா சங்கரன் தயாரிக்கிறார். இந்தப்படத்தை எழுதி இயக்கவிருக்கிறார் கார்த்திராம்.
இந்தப்படத்தோட கதை திருநங்கைகள் சம்பந்தப்பட்ட கதை. இந்தப்படத்தோட திருநங்கைகளுக்கு விளையாட்டில் தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் கதை. இதில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமே படத்தின் மொத்த விஷயத்தையும் கொண்டு போகும். திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இவ்வுலகில் கிடைப்பதற்கு பெரிய போராட்டமாகவே இருக்கு. அந்தப் போராட்டம்தான் இந்தப்படத்தோட கதை. திருநங்கைகள் சாதிச்ச அனைவரும் ஒரு பெரும்போராட்டத்திற்கு அப்புறம்தான் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோலத்தான் இந்தப்படமும், விளையாட்டில் தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் புதுமுகங்கள் மட்டுமே? என்னடா இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்துட்டு புதுமுகத்தை வச்சு எடுக்கிறாங்களே பாக்குறீங்களா? இல்ல, புதுமுகங்கள்தான் இந்தப்படத்தோட பலம், பலவீனம். இந்தப்படத்தில் வரும் ஒரு வசனம் உள்ளது அந்த வசனத்தை ”உரிமை இருக்கிறவங்ககிட்டையே பணம் வாங்கிதான் அவங்க உரிமைய கொடுக்கிறோம்.. உரிமையே இல்லாதவங்க எப்படி உரிமையோடு விளையாட முடியும்…” இதுதான் இந்தப்படத்தில் வரும் முக்கியமான வசனம். மக்கள் அனைவரும் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று எங்கள் குழுவின் சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னடா படப்பூஜையிலையே படத்தோட வசனத்தை பற்றி பேசுறாங்களே பாக்குறீங்களா? மக்கள் இதைப்பத்தி பேச ஆரம்பிக்கணும், பேச ஆரம்பிச்சவுடன் அரசாங்கம் காதுக்குள் போக, அரசாங்கம் இதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. படப்பிடிப்பு நாட்கள் 20 நாள் மட்டுமே. விரைவில் சந்திப்போம் அகனளுடன்.