Monday, October 14
Shadow

நடிகர் ராம் பொத்தினேனியின் RAPO19 படத்தில் ஆதிக்கு ஜோடியாக, நடிகை அக்‌ஷரா கௌடா இணைந்துள்ளார் !

தென்னிந்திய திரைத்துறையில், இளம் உள்ளங்களின் கனவு நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை அக்‌ஷரா கௌடா. தமிழில் அவரது நடிப்பில் “சூர்ப்பனகை மற்றும் இடியட்” திரைப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாகும், உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘RAPO19’ படத்தில், ஆதியின் ஜோடியாக அவர் நடிக்கத் தொடங்கியுள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக வெளியான, சமீபத்திய அறிவிப்பு டோலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி ஜோடியை ஒன்றாகக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். தற்போது, ரங்கஸ்தலம், நின்னு கோரி மற்றும் யு-டர்ன் போன்ற திரைப்படங்களில், மாறுபட்ட கதாபாத்திரங்களில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த ஆதி பினுஷெட்டிக்கு ஜோடியாக அக்‌ஷரா கௌடா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, மேலும் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஆதி, எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவருக்கு அக்‌ஷரா கௌடாவுடன் தீவிரமான காதல் பகுதியும் உள்ளது. நடிகை அக்‌ஷரா கௌடா, இதுவரை பார்த்திராத பாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் தோன்றி, கடப்பா தெலுங்கு மற்றும் மதுரை தமிழ் பேசுவார். நகர்ப்புற மாடர்ன் வேடங்களில் அவரது திறமையைக் கண்ட ரசிகர்களுக்கு, இது மாறுப்பட்ட, தனித்துவமான விருந்தாக இருக்கும்.

Srinivasaa Silver Screen சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரிக்கிறார். பவன் குமார் படத்தை வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.