Saturday, October 5
Shadow

இந்தி நடிகர் அக்ஷய்குமார் தனது சேமிப்பில்25 கோடி நன்கொடை

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.25 கோடி நிதி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பலியாகியுள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அரசுக்கு மக்கள் தங்களால் இயன்ற சிறிய தொகையானாலும் நிதியுதவியாக அளிக்கலாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் ரூ. 25 கோடி நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.


இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் அக்‌ஷய்குமார், “எல்லாமே மக்கள் உயிர் வாழ்வதற்காகத்தான். நாம் ஏதோவொன்றை செய்யவேண்டிய தேவை உள்ளது. என்னுடைய சேமிப்பிலிருந்து ₹25 கோடியை பிரதமர் நிதிக்கு அளிக்க உறுதியளிக்கிறேன். உயிர்களை காப்போம்” என்று தனது பதிவில் அக்‌ஷய்குமார் பதிவிட்டுள்ளார்.