Wednesday, July 24
Shadow

மோகன்லால் நடித்த ஒடியன் கதாபாத்திரத்தை மீட்டெடுத்துள்ள ‘கருவு’

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’. இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன்.. தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஒடியனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒடியனைப் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அந்தவகையில் இந்த ‘கருவு’ படமும் சற்றும் குறைவில்லாத மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு உருவாகியுள்ளது.

டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தின் திகில் மற்றும் த்ரில் காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோஷன். பிரம்மிக்கும்படி எடிட்டிங் செய்திருக்கிறார் ஹாரி மோகன்தாஸ்

முற்றிலும் புதியவர்களால் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.