Wednesday, September 22
Shadow

சூரியாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்

எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அமேசான் பிரைம்- சமீபத்திய திரைப்படங்கள், பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்டப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், விளம்பரம் இல்லாமல் இசையை கேட்பதற்கான அமேசான் பிரைம் மியூசிக்.. இவையெல்லாம் இலவசமாகவும், விரைவாகவும் வழங்குவதற்கான வினியோக கட்டமைப்பு, புதிய பார்வையாளர்களை சென்றடைவதில் எளிதான அணுகுமுறை ஆகியவற்றை நம்ப முடியாத வகையில் அமேசான் வழங்கிவருகிறது.

சிறந்த ஒப்பந்தங்கள், புதிய தொடக்கங்கள், வரம்பற்ற வாசிப்பை கொண்ட பிரைம் ரீடிங், இலவச விளையாட்டு உள்ளடக்கம் இவற்றுடன் கேமிங் வித் பிரைம் மூலம் ஏராளமான பலன்கள்.. இவை அனைத்தும் ரூ 999 /- ரூபாய் செலுத்தி ஆண்டு உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்களுக்கு அமேசான் வழங்கிவருகிறது. நீங்களும் இந்த சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளராகி அமேசான் உள்ளடக்கத்தின் நீண்ட பட்டியலை பார்வையிடலாம். அமேசான் பிரைம் மொபைல் பதிப்பு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது என்பது கூடுதலான நல்ல விஷயம்.

மும்பை இந்தியா 05 ஆகஸ்ட் 2021

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிறுவனம் இன்று சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனான முதல் பிரத்யேக ஒப்பந்தத்தை அறிவிக்கிறது. இதில் ஒரு பகுதியாக அடுத்த 4 மாதங்களில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் நான்கு திரைப்படங்கள் உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக திரையிடப்படுகிறது. இந்திய பார்வையாளர்களின் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களின் தேடல்களுக்கான தேர்வு திட்டங்களில் தங்களுடைய அர்ப்பணிப்பை வழங்கும் இந்த சங்கமம், அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் மொழி உள்ளடக்க தொகுப்பை மேலும் வலிமைப்படுத்தி, சிறந்த உள்நாட்டு கதைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் நேரடி சேவையை வழங்கி வருகிறது. திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் தயாராகி, பட்டியலிடப்பட்ட படங்களில் இந்தியாவின் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப் படங்களும் இடம்பிடித்திருக்கிறது. இந்த திரைப்படங்களில் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ போன்ற படங்களும் உள்ளன.

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான ‘உடன்பிறப்பே’ என்ற படமும் உள்ளது.

அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய ‘ஓ மை டாக்’ என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது.

ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

‘அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் திரைப்படங்களி மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது’ என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குனரும், உள்ளடக்க தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,’ சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கிறோம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ‘சூரரை போற்று’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறோம். இவர்கள் தமிழக எல்லையை கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கபூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களை கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச் சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.’ என்றார்.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்,’ கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள் முதல் சூரரைப்போற்று வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *