Tuesday, May 28
Shadow

Announcement of Indian’s official entry in ‘Best Foreign Film’ Category for 95th Oscar Awards

அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கார்) வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய திரைப்படம் குறித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் செய்தி குறிப்பு

2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் திரு டி. எஸ். நாகபரணா தலைமையிலான குழு 2022-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்தது.

பட்டியிலிடப்பட்டிருந்த பல்வேறு படங்களில் இருந்து இந்த குழு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ), திரைப்படத்தை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

‘செலோ ஷோ’வில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இந்த படத்தை ஒரு மனதாக தேர்வு செய்ய காரணமாக இருந்தது.

‘செலோ ஷோ’ என்பது வெளிநாட்டில் பொதுவாக காட்டப்படும் வழக்கமான இந்திய சினிமா போல் இல்லாமல், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு திரைப்பட ஆர்வலர்களின் உணர்ச்சிகளையும் தொடும் ஒரு திரைப்படமாகும்.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான கதைக்களத்தில், சினிமாத்துவத்துடன், சிறப்பான நடிப்பு, ரம்மியமான காட்சியமைப்பு மற்றும் சிறந்த ஒலி தரத்தில் துல்லியமாக இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் இந்திய சினிமா துறையின் நுணுக்கங்களையும் பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது.
இந்த அனுபவம் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு புதிதாக இருக்கும்.

கதை புதுமையாக ஆரம்பித்து நம்பிக்கை தரும் விதத்தில் முடிவடையும்.

படம் முடிந்த பின்னும் அதில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மனதில் நிற்கும். படத்தில் கூறுவது போல சிறந்த திரைப்படங்களை உருவாக்கும் கதைகளைச் சொல்லும் ஒளியை நாம் கண்டறிவோம்.

‘செலோ ஷோ’ உணர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு படமாகும்.

*
The Press Note on behalf of the FFI:On selection or the Indian Film for Entry to the Academy Awards
(Oscar) in the Foreign Language Category On behalf of the Jury Board honoured to select the Indian Oscar entry to the Foreign anguage Category of Academy Awards,2022,operating under the Chairmanship of the esteemed Director Mr.T.S. Nagabarna, we feel proud to select the film entitled ‘Chhelo Show’ (The Last Show),unanimously from amidst the credible list of other great Indian films reviewed.
This unanimously accepted selection owes to several reasons of cinematic excellence showcased in the aforesa id film.

‘Chhelo’ Show is a film that transcends the banal narrative of the regular Indian reality shown abroad and touches the emotional chords of every film buff around the world.

The narrativeis impactful,with cinematic moments captured in great details, captivating performances, visual beauty and auditory effects.

It showcases the Indian nuances and heritages sulitly and truthfully which be an eye opener for the foreign audience.

It begins innovatively and ends with a ray of hope.

The characters, locales and the narrative stays with the audience long after the end credits roll. like the film says -we discover the light enabling us to tell stories resulting in great films. Chhelo show is a film to be felt and experienced.

ஆஸ்கர் விருது தேர்வுக்கான இந்திய திரைப்பட அறிவிப்பு

இந்திய சார்பில் 95வது ஆஸ்கர் விருதுக்காக இந்திய சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

இந்த தேர்வுக்குழுவினில்

1 திரு. டி.எஸ். நாகபரணா (தலைவர்) –
2 திரு. கமலேஸ்வர் முகர்ஜி
3 திரு. அஞ்சன் போஸ்
4 திரு. சங்கீத் சிவன்
5 திரு. ஜதின் பண்டிட்
6 திருமதி. நிகத் மரியம் நீருஷா
7 திரு. ராஜேஷ் பெட்னேகர்
8 திரு. மாந்தர் கமலாபுர்கர்
9 திரு. மனிஷ் சைனி
10 திரு. அஜித் சிங் ரத்தோர்
11 திரு. பிரதீக் குப்தா
12 திரு. பவன் வடேயார்
13 திரு. பிஜோன் தாஸ்குப்தா
14 திரு.ஷிரபானி தியோதர்
15 திரு. தரம் குலாட்டி
16 திருமதி பிரமிளா ஜோஷ்
17 திரு. ராஜேஷ்
18 திரு. சந்தான பாரதி
19 திரு.ரென்ஜி பனிகர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சந்திப்பினில்…

தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது..

இந்திய சார்பில் வருடர்த்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்தெடுக்கப்பட்ட படத்தினை தலைவர் அறிவிப்பார்.

 

தலைவர் நாகாபரணா (தலைவர்) பேசியதாவது…

இங்கு இந்த விழாவில் பங்கு கொண்து மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக இருக்கிறது. ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழிக்கான இந்திய ஆஸ்கார் நுழைவுத் தேர்வைத் தேர்ந்தெடுத்ததற்காக மதிப்பிற்குரிய இயக்குநர் திரு. டி.எஸ். நாகபரணா ஜூரி வாரியத்தின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்.

பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு ‘செலோ ஷோ’ (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்

மொத்தம் -13 படங்கள்
இந்தி-6
01-பதாய் தோ
02-ராக்கெட்ரி
03-ஜுண்ட்
04-பிரம்மாஸ்திரம்
05-தி காஷ்மீர் ஃபைல்ஸ்
06-அனெக்

திமாசா (அசாம்)-1
செம்கோர்

தமிழ்-1
இரவின் நிழல்

குஜராத்தி-1
செலோ ஷோ

தெலுங்கு-2
ஆர்ஆர்ஆர்
ஸ்தலம்

மலையாளம்-1
அரியுப்பு

பெங்காலி-1
அபராஜிதோ

Announcement of Indian’s official entry in ‘Best Foreign Film’ Category for 95th Oscar Awards

A press conference was held today (September 20, 2022) at the South Indian Film Federation to announce the film that will be sent by India for the 95th Academy Awards. During this event, the selection committee of Film Society of India took part and announced the films recommended for the Oscars, and the final one that have been selected among them, which is Gujarati Movie ‘The Chhelo Show’ (The Last Show).

The Selection Committee Members include

1. Thiru. T.S. Nagabharana (President)
2. Thiru. Kamaleshwar Mukherjee
3. Thiru. Anjan Bose
4. Thiru Sangeeth Sivan
5. Thiru Jathin Pandit
6. Tmt. Nikath Mariyam Nirusha
7. Thiru. Rajesh Pednekar
8. Thiru. Maanthar Kamala Purkar
9. Thiru. Manish Saini
10. Thiru. Ajith Singh Rathore
11. Thiru. Pradeep Gupta
12. Thiru Pavan Vadeyar
13. Thiru. Bijon Das Gupta
14. Thiru. Shibani Deodhar
15. Thiru. Dharam Gulati
16. Tmt. Pramila Josh
17. Thiru. Rajesh
18. Thiru Santhana Bharathi
19. Thiru Renji Panicker

Producer Ravi Kottaragara said, “Around 4000-5000 movies are made in India annually. These days, lots of good content-driven movies are being made. The Oscar Awards commenced in 1929, but there wasn’t any section for Best Foreign Film Category. However, the scenario has changed completely now. Lots of promising movies are being sent from India. The president will announce the list of movies sent to Oscar’s committee this year.”

President Nagarabharana said, “I feel happy and proud for having taken part in this event. 13 movies have been recommended for the Oscar Awards. These movies have been selected among several languages, analysed in depth and finally, Gujarati Movie ‘The Chhelo Show’ (The Lost Show) has been selected.

Among movies from various regions, the Gujarati movie ‘The Chhelo Show’ has been selected on the behalf of FFI. Besides, Honorable Director Mr. T.S. Nagabharana was felicitated on behalf of the Jury Board.

The List of Other Indian languages movies recommended for the Oscar entry is as follows

Total – 13 Movies
Oscars Entry
Total -13 Films

Hindi-6
01-Badhai Do
02-Rocketry
03-Jhund
04-Brahmastra
05-The Kashmir Files
06-Anek

Dimasa (Assam)-1
Semkhor

Tamil-1
Iravin Nizhal

Gujarati-1
Chello show

Telugu-2
RRR
Sthalam

Malayalam-1
Ariyuppu