Tuesday, December 3
Shadow

Arun Vijay starrer ‘Sinam’ Audio Launch

Arun Vijay starrer ‘Sinam’ Audio Launch

Arun Vijay starrer ‘Sinam’ is produced by R. Vijayakumar of Movie Slides Pvt Ltd and is directed by GNR. Kumaravelan. Pallak Lalwani, Kaali Venkat, RNR Manohar, KSG Venkatesh, Marumalarchi Bharathi & others are among the star-cast. The film has musical score by Shabir Tabare Alam and cinematography handled by Gopinath. With the movie hitting screens worldwide on September 16, 2022, the movie audio launch was held in Chennai.

Here are some of the excerpts from this occasion.

Actor Arun Vijay said, “Just like Kumaravelan sir said, I wanted Sinam movie to be released in the theaters. When I listened to the script, I clearly felt that it’s a movie made for you all. I thank Kumaravelan sir for creating Paari Velan role for me. I have donned the police role in the past with Kuttram 23, but this one will be different. It has emotional and realistic approach to every character. I have underplayed throughout the movie, and it will be different from my previous ones. I thank my father for being supportive throughout the movie’s production. Without his support, this project would have not achieved the final output it has gained now. I thank the entire technical team for a lovely support. They together have shaped the movie with such excellence. I have always loved Shabir’s works. He has done a fabulous work with not just songs, but re-recording as well. The movie will be related by all the audiences as they’ll find a deep connection and they’ll surely like it.”

Producer Vijay Kumar said, “Everyone is saying that I am the producer of this movie, but it’s Arun Vijay, and I am just a production manager. Everyone in the team have been a family, and have contributed a lot towards the film’s best output. I thank all the well-wishers like Vijay Antony for patiently attending the entire event. Music Director Shabir will become a great musical icon in the industry. Kumaravelan sir has done a remarkable job, and his assistant directors have worked hard. Heroine Pallak is the main attraction in this movie as she befittingly looks perfect as a South Indian actress. I wish the entire team for the grand success of this movie. I thank everyone for wishing the best for success of this movie. I request you all to watch the movie on September 16, and support it.”

Filmmaker GNR Kumaravelan said, “After watching my Haridas movie, Arun Vijay sir told me that both of us should work together. Later we got busy with our projects. After the disastrous result of Wagah, I realized my strength and shortcomings as my father instructed me. He told me that I am good in emotions, and told me to make movies based on this theme. This helped me to develop the project ‘Sinam’ with the debut story of Sathish, a police writer. After 6 months of script work, I approached Arun Vijay sir. He never considered my previous work’s failure, but instead, understood my potential and decided to produce the movie himself along with his father. Although I was happy, there was a kind of huge responsibility as Vijay Kumar has 50 years of experience in the industry. While nearing the completion, pandemic left a bad impact on everyone. During this time, Arun Vijay sir got a big OTT offer. Although I wanted the movie for a theatrical release, I had no options, but as a well-wisher asked me to go ahead. But then, He understood my desire, and gave the word that Sinam will be a theatrical release. He is a man of word, and has kept up his promise enabling theatrical release now. I thank the entire team for being a great support in materializing this movie. I can assure you all that Sinam will be a movie for all.”

Actress Pallak Lalwani said, “Everyone asks me how do I work in Tamil movies without knowing the language. Emotions have no language, and this movie has it in plenty. There is a good message in this movie. I thank producers Vijay Kumar sir, Arun Vijay sir and director Kumaravelan sir for giving me great support. I am really happy with my character Madhangi has shaped up. I request you all to watch the movie in the theaters, and you’ll like it.”

Stunt Silva said, “Since Arun Vijay is an action-packed hero, don’t assume this to be an action-thriller. This is a beautiful and emotional family entertainer laced with sentiments and emotions, and action factors will be one of the elements. I am glad that the family members of Arun Vijay sir shared their first feedback over my contribution to this movie. Whenever I get onboard for AV sir movies, we would start rehearsing with stunt team, three months prior to the shooting. I am sure everyone will like this movie.”

Cinematographer Gopi said, “This is my fourth movie with Arun and it has come out really well. I request everyone to watch this movie and support it.”

Actor Kaali Venkat said, “I am grateful to the production team for being such a great support to me during the crucial times in COVID-19 time. The whole process of working in the movie ‘Sinam’ was great. Working with Arun Vijay sir and GNR Kumaravelan sir was so much amazing. Like everyone said, Sinam is a movie that will cater the tastes of family audiences, and I request you all to watch this movie in the theaters and support it.”

Music Director Shabir said, “Being far away from our Tamil Land, I always have special affinity for Tamil language. I make sure that the essence of Tamil is completely present there in the songs. There are four songs in the movie ‘Sinam’, and I am glad that it has garnered good welcome soon. When Arun Vijay sir walked into the studio for recording a song with such a stunning voice, there was a standing ovation there. Director GNR Kumaravelan is a prodigious filmmaker. Sinam (anger) always gives more space to express in it art form. I thank Kumaravelan sir for giving this opportunity to me.”

Actor Radhakrishnan Parthiban said, “Arun Vijay isn’t just a handsome actor, but a hardworking personality. In spite of his father Vijay Kumar being a part of industry, he didn’t get go through the recommendations. He had to wait patiently for years to have his breakthrough. I am really happy with the way; Arun Vijay performed a song here. The trailer is scintillating. I am sure many real life police officers will envy him for being a handsome cop. I wish the entire team for the grand success of this movie.”

Director Arivazhagan said, “Everyone knows Arun Vijay sir as a good actor, but I have witnessed his caliber as a producer while working in the movie Kuttram 23. His involvement was extraordinary. I am great to see him produce a good quality content with his father Vijay Kumar sir in this movie ‘Sinam’, which is evident with the trailer. GNR Kumaravelan sir is a great filmmaker, and his colossal work was evident through the movie ‘Haridas’. The entire team looks promising with their works.

Actor Vijay Antony said, “I got an opportunity to share the screen with Arun Vijay sir in Agni Siragugal. I was awestruck with his top-notch performance. He will surely scale greater heights with his futuristic projects. The way, he rendered a song gave a similar impact of Kamal Haasan sir’s work in ‘Kadavul Paathi Mirugam Paathi’ from Aalavandhan. I am here at the event for a couple of people – One for Arun Vijay sir and another one is filmmaker GNR Kumaravelan sir. I have worked as music director for his three movies. He is a good human. I will be watching the First Day First Show of this movie, and I request everyone to watch it in the theaters on September 16.”

Actor Prasanna said, “Much alike others, I have also come here to attend this event for the sake of Arun Vijay sir. I love him a lot and admire his works. Both I and Sneha are always happy with the works made by Kumaravelan sir. The songs by music director Shabir have good depth. Kaali Venkat is a fabulous actor, who doesn’t score brownie points with comedy roles, but delivers extraordinary spell in any given characters.”

Director Magizh Thirumeni said, “Arun Vijay sir is a multi-faceted actor, who can deliver any roles with an ease. Be it comedy, action, romantic, emotional or whatever character, he leaves us enthralled. This function is special for me. Shabir has delivered beautiful songs for this movie. Kaali Venkat is a talented actor, and he is going to touch greater heights. The entire crew has done a beautiful work, and I am sure the movie is going to garnered phenomenal response.”

Actor Shanthnu Bhagyaraj said, “When I get motivated by anyone in the industry or public, they always refer Arun Vijay sir. He has crossed so many hurdles and criticisms to create a successful domain for him. Even actor Vijay sir encouraged me stating that if he went through same hurdles during the early stage of his career and even Arun Vijay, who after many years of challenges has set a new market for him. I thank the entire team for the grand success of this movie.”

Director Hari said, “The Trailer looks amazing loaded with emotional essence and the songs by Shabir are too good. I am so happy to see my father-in-law Vijay Kumar producing a movie after many years. Today, everyone likes movies with emotional contents and I am confident that Sinam is going to witness grand success. I wish the entire team and everyone in trade circle for the great success of this movie.”

Cinematographer Balasubramaniem said, “Kumaravelan sir is a talented filmmaker, and his creative approach for pictures he clicks on mobile itself is amazing. So just imagine the output of the movies he makes. Arun Vijay sir is a dedicated artiste, and I can see that he has delivered a tremendous acting in this movie. I wish the entire team for the success of this movie.”

Producer T Siva said, “I could experience the feel of Kamal sir movie in Sinam as Arun Vijay rendered the song. Being the student of Kamal sir, Kumaravelan has done a great job. Arun Vijay is a fabulous actor. This movie is going to be a great hit for Kumaravelan sir. I have more confidence over the film’s success. If this movie becomes hit, it will be an additional attraction for my production ‘Agni Siragugal’ that will release in November.

 

“சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்..,

இயக்குனர் ஹரி கூறியதாவது..,
“படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் அறிவழகன் கூறியதாவது..,
“அருண் விஜய் உடைய அர்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்படகூடிய நபர். இந்த படத்திலும் முழு உழைப்பை தந்துள்ளார். விஜயகுமார் சார் உடன் சேர்ந்து இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார் அதற்கு எனது வாழ்த்துகள். இயக்குனர் குமரவேலன் திறமையான நபர், அவருடைய முந்தைய படங்கள் அவருடைய ஆழமான கதையமைப்பை வெளிகாட்டியது. ஒளிப்பதிவாளர் கோபிநாத் உடைய விஷுவலை பார்க்க நான் காத்திருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் சாந்தனு கூறியதாவது..,
“அருண் விஜய் உடைய பயணம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகிற ஒன்று. தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி கடின உழைப்பை கொடுத்து தனக்கென தனிப்பாதையை உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் செப்டம்பர் 16 வெளியாக இருக்கிறது, இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,
“நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டி ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குனர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான பணியை கொடுத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 16 வெளியாகவுள்ளது, அனைவரும் படம் பாருங்கள் நன்றி.

மகிழ் திருமேனி கூறியதாவது..,
“அருண் விஜய் இப்பொழுது பெரிய வெற்றியை அடைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. அவர் மிகச்சிறந்த நடிகர் என்பது அவருடைய அனைத்து வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பில் தெளிவாக தெரிகிறது. விஜயகுமார் சார் மிகவும் திறமை வாய்ந்த அதே நேரத்தில், மனிதநேயம் மிக்க ஒரு நபர். இயக்குனர் குமரவேலனுடைய அனைத்து படத்தையும் ரசிகர் போல் பார்ப்பவன் நான். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் பிரசன்னா கூறியதாவது..,
“பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது..,
“அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது, அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள்.”

ஒளிப்பதிவாளர் கோபிநாத் கூறியதாவது..,
“இது ஒரு குடும்ப படம், அருண் விஜய் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தை பார்த்து உங்களுடைய வாழ்த்துக்களை கூறுங்கள். “

இசையமைப்பாளர் சபீர் கூறியதாவது..,
“மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் பணியாற்றியுள்ளோம். அருண் விஜய் சார் ஒரு பாடல் பாடியுள்ளார், அந்த பாடல் சுலபமானது அல்ல, அது தொழில்முறை ஆட்களால் மட்டுமே உணர்வுடன் வெளிகாட்ட முடியும், அதை அவர் கொடுத்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கதையோடு சேர்ந்து பயணிக்கும் படி இருக்கும். இயக்குனர் குமரவேலன், ஆக்‌ஷன், எமோஷன், அதே நேரத்தில் சமூகத்துடன் சார்ந்து நிற்கும் திரைப்படத்தை உருவாக்க கூடியவர், அவர் உடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். இந்த படம் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.”

இயக்குனர் GNR குமரவேலன் கூறியதாவது..,
“என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.”

நடிகை பாலக் லால்வாணி கூறியதாவது…
இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறனு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் மேல நம்பிக்கை வைத்த இயக்குநர், அருண் விஜய் மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக நல்ல படம் தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

நடிகர் அருண் விஜய் கூறியதாவது..,
“இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்த கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்த படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒன்றாக இருக்கும். “

தயாரிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது..,
“ படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த படமாக நினைத்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க கூடிய படமாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. “

சினம் படத்தினை Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரித்துள்ளார். இயக்குநர் GNR குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஷபீர் (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மைக்கேல் BFA (கலை), A ராஜாமுகமது (எடிட்டர்), R சரவணன் (கதை-உரையாடல்கள்), ஆரத்தி அருண் (காஸ்ட்யூம் டிசைனர்), மதன் கார்க்கி-ஏக்நாத்-பிரியன்-தமிழனங்கு ( பாடல் வரிகள்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு).