Thursday, September 29
Shadow

Author: admin

நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் வழங்கிய கொரோனா தடுப்பு பொருட்கள்..!

நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் வழங்கிய கொரோனா தடுப்பு பொருட்கள்..!

General News
நக்ஷத்ரா சேரிடபிள் டிரஸ்ட் சார்பாக V.R.ராஜேஷ், நடிகர் விண் ஸ்டார் விஜய் ஆகியோர் தொடர் நற்பணிகளின் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சிரமமான காலகட்டத்தில் காவலர்களுக்கு பயன்தரும் வகையில் சென்னை மாநகரக் காவல் R7, கே.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.சிவக்கமார் அவர்களிடம் முகக் கவசங்கள், கிருமி நாசினி, கபசுர குடிநீர் மற்றும் கை கிளவுஸ்கள் வழங்கினார்கள். மேலும், இவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்நிலையங்களுக்கும் மேற்கண்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்க திட்டமிட்டுள்ளது பாராட்டத்தக்கது.   ...
விஜய் ஆண்டனியின் வெள்ளை மனம்

விஜய் ஆண்டனியின் வெள்ளை மனம்

News
தான் நடித்து வந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை நடிகர் விஜய் ஆண்டனி குறைத்துள்ளார். 'பிச்சைக்காரன்', 'கொலைகாரன்' போன்ற திரைப்படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய் ஆண்டனி, தற்போது 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் வெளியாகும் திட்டத்துடன் எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக முடங்கிப் போயிருக்கிறது. 50 நாட்களுக்கும் மேலாக எந்த விதமான வேலைகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில், படப்பிடிப்பில் இருந்த பல தமிழ் திரைப்படங்களும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றன. போஸ்ட் புரொடக்‌ஷன் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படங்கள் கூட திரையரங்குகள் இல்லாத...
திரையரங்குகள் திறப்பு : திருப்பூர் சுப்பிரமணியம்

திரையரங்குகள் திறப்பு : திருப்பூர் சுப்பிரமணியம்

News
திரைப்படத் துறை சார்ந்த அனைத்து பணிகளும் முடங்கியுள்ள நிலையில் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ள தொலைக்காட்சி, தயாரிப்பாளர்கள், தொழிலாளர் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள், நிர்வாகிகள் இல்லாத அமைப்பு சார்ந்தோர் பணிகளை தொடங்க அனுமதி வழங்குமாறு அறிக்கைகள் வெளியிடுவதும் மனு அளிப்பதும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. எல்லோருக்கும் அருள் பாலிப்பவராக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சினிமா பிரபலங்களை சந்திக்கத் தயக்கம் இன்றி அனுமதித்து வருகிறார். மதுபானக் கடைகளையே திறந்து விட்டார்கள், நமக்கும் அனுமதி கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையுடன் திரைத் துறையினர் காத்திருக்கின்றனர். இதற்கு இடையில் மே 25 அல்லது ஜுன் முதல் வாரம் திரையரங்குகளைத் திறக்க தமிழக முதல்வர் அனுமதி அளிக்க உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சங்க உறுப்பினர்களுக்கு ஆடியோ...
விஷால் தங்கை நிஸ்மா உதவி

விஷால் தங்கை நிஸ்மா உதவி

News
  நடிகர் விஷால் அவர்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார், இதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய தங்கை மருத்துவர் நீஷ்மா அவர்கள் அங்கு உள்ள மருத்துவமனைகளுக்கு கரோனா PPE செட் இலவசமாக வழங்கி வருவதை அறிந்த நடிகர் விஷால் உடனே தமிழகத்திலும் வழங்கவும் வேண்டுகோள் வைத்ததின் பெயரில் மருத்துவர் நீஷ்மா அவர்கள் உடனே MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். இதனை தொடர்ந்து மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.   ...
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்!

News
தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 53. இர்பான் கான், 1988 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-ல் இவர் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-ல் பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2018-ல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். சில நாள்களுக்கு முன்பு இர்பான் கானின் தாய் காலமனார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி...