Wednesday, October 5
Shadow

ஜெயா டிவியில் “தக திமி தக ஜனு”

ஜெயா டிவியில் புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்காக ஒளிபரப்பாகும் பிரத்யேக நிகழ்ச்சி “தக திமி தக ஜனு” ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

சமீபத்தில் புதுப்பொலிவுடன் புது சுற்றுகளுடன் ஒளிபரப்பான 14 எபிசோடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 வெற்றியாளர்கள் மற்றும் வைல்ட் கார்டு மூலம் தேர்வான 4 போட்டியாளர்கள் என 18 பேர் களம் இறங்குகிறார்கள் .

கால் அரை சுற்று ,அரை இறுதி சுற்று ,இறுதி சுற்று என கூடுதல் சுவாரஸ்யங்களோடு ஒளிபரப்பாகவிருக்கும் இனிவரும் எபிசோடுகளில் உலக அளவில் புகழ்பெற்ற பத்மபூஷன் திரு .தனஞ்செயன் மற்றும் திருமதி .சாந்தா தனஞ்செயன் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள் .

அரை இறுதி சுற்றிலும் ,இறுதி சுற்றிலும் ,கூடுதல் நடுவர்கள் இருவர் இவர்களுடன் சேர உள்ளார்கள் .இறுதி சுற்றில் 4 பிரபல நடன குருக்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நடன தம்பதியினருடன் சேர்ந்து டைட்டில் வின்னரை (Title winner)தேர்வு செய்வார்கள். இந்நிகழ்ச்சியை நடிகை இந்திரஜா தொகுத்து வழங்குகிறார் . கருத்து மற்றும் இயக்கம் – கலைமாமணி டாக்டர் ராதிகா சுரஜித் .