Monday, September 9
Shadow

‘Bell’ Movie PressMeet

*பெல்” பொடன்ஷியல் மிக்க கதை என்பதால் நடித்தேன் – குரு சோமசுந்தரம்*

*திருமணம் ஆனதால் பல படங்களில் நிராகரிக்கப்பட்டேன் – கதாநாயகி துர்கா பேச்சு*

*தமிழர் வரலாற்றில் நிறைய வரலாறு மறைந்து கிடக்கிறது – இயக்குனர் ஆர்.வெங்கட்புவன்*

*நீச்சல் தெரியாமல் கிணற்றில் குதித்த தயாரிப்பாளர் – கதையாசிரியர் வெயிலோன் பேச்சு*

பீட்டர்‌ ராஜின்‌ ப்ரோகன்‌ மூவிஸ்‌ தயாரிப்பில்‌
இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌ இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர் களின்‌ மருத்துவம்‌
சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக “பெல்‌” உருவாகி யிருக்கிறது.

இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித் துள்ளனர்.
பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார்.

இப்படம் பத்திரிகை, மீடியா நிருபர்களுக்கு இன்று திரையிடப்பட்டு அவர்களது பாராட்டை பெற்றது.
பின்னர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பேசினர்.

குருசோமசுந்தரம் பேசியதாவது:

எனக்கு பத்திரிகையா ளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென் றால் நான் நிறைய நாவல்கள் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், கிரைம் நாவல்கள் வரும் அதில் பத்திரிகையாளர் கதாபாத்திரம் வருவதைபார்த்து பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் . அதனால் பத்திரிகை யாளர்கள் மீது நிறைய மரியாதை வைத்தி ருக்கிறேன்.
பட தயாரிப்பாளர் பீட்டர் ராஜுக்கு எனது வாழ்த்துக்கள். போட்ட முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கணும்.
பெல் படக் கதையை இயக்குனர் புவன் கூறும்போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்திற்கு இசையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் வெற்றி பெறும் . அதற்கு உங்கள் அனை வரின் ஆதரவு தேவை.

இயக்குனர் வெங்கட் புவன் பேசியதாவது:

படத்தை எடுக்க தயாரிப் பாளர் முக்கியம். பீட்டர் ராஜ் எனது நண்பர் அவர் இப்படத்தை எடுங்கள் நான் தயாரிக்கிறேன் என்றார். மனதில் எனக்கு ஒரு பயம் இருந்தது. நம்மை நம்பி படமெடுக்கிறார், படம் நன்றாக வரவேண்டும் என்று எண்ணினேன். அவர் என் மீது வைத்தி ருக்கும் நம்பிக்கைக்கு நல்ல பட தர வேண்டும் என்று ரொம்பவும் ஆராய்ந்து இந்த கதையை தேர்வு செய்தோம். அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் படத்தின் உதவி இயக்குநர் போல் என்னுடனேயே இருந்து எல்லா பணிகளிலும் உதவினார். இன்று வரை அவர் உடனிருந்து எல்லாவற்றையும் செய்து தருகிறார். அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசுதான். அவருக்கு என் நன்றி. இந்த படத்தை புரோகன் மூவிஸ் பீட்டர் ராஜ், டேவிட் ராஜ் தயாரித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை வசனம் வெயிலோன் எழுதி உள்ளார். அவரும் எனது நண்பர். தமிழில் நிறைய விஷயங்கள் மறைந்து கிடக்கிறது. வெயிலோன் தமிழ் விரும்பி. நிறைய படிப்பார், பேசுவார். அவர்தான் பழந்தமிழர் மருத்துவம் பற்றி கூறி அகத்தியர் 6 ரகசிய மருத்துவ குறிப்புகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாது. அதை மையமாக வைத்து கதை எடுப்போம் என்றார். அது சொல்ல வேண்டிய விஷயம் என்று எனக்கும் தோன்றியது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ரொம்பவே பாராட்டி தயாரிக்க முன் வந்தார்.
படத்தில் முக்கிய வேடம் ஏற்ற குரு சோமசுந்தரம் நடிப்பு பற்றி எல்லோ ருக்குமே தெரியும் மிகவும் அருமையாக கலக்கியிருக்கிறார். ரொம்ப ஆதரவாகவும் இருந்தார் . அவரிடம் முதலில் கதையை சொன்னபோதே நடிக்க சம்மதம் தெரிவித்தார் அதுவே எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது. கதாநாயகனாக நடித்தி ருக்கும் ஶ்ரீதர் மாஸ்டருக்கு கதையை
ஒன்லைன் தான் சொன் னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் நடன இயக்குனராக இருந்தாலும் அவருக்குள் ஒரு நடிகன் மறைந்திருக்கிறான். அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதாநாயகி துர்கா. அவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். காட்டுக்குள் பெரும்பகுதி படப்பிடிப்பு என்றபோது ஆண்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் ஒரு பெண் என்பவருக்கு பல அசவுகரியங்கள் இருக்கிறது அதை பொருட்படுத்தாமல் ரொம்ப தைரியமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி ஸ்வேதாவும் நன்றாக நடித்திருக்கிறார். கேமராமேன் மற்றும் ரமேஷ் பாலாஜி யூனிட் ரொம்பவே ஆதரவாக இருந்தனர்.

மேலும் அவர் கூறும் போது,”பல நூறு ஆண்டு களுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங் களை தனது நம்பிக் கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌
கட்டளையிட ரகசியங்
ளைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌
இடையே நடந்த போராட்டமே படத்தின்‌
மையக்கதையாகும்‌.

நான்லீனியர்‌ முறையில்‌ காதல்‌, குடும்பம்‌, ஆக் ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌ சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக
அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌. இது அனைத்து வயதினருக்கும்‌ ஏற்ற படமாக இருக்கும்‌” என்றார்.

*மாஸ்டர், நடிகர் ஶ்ரீதர் பேசியதாவது*

பெல் கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பு பெரியது. இதற்காக இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. படத்தில் வசனம் பெரிய அளவில் ஒர்கவுட் ஆகியிருக்கிறது. வெயிலோன் வித்தியா சமான சிந்தனை வசனத்தில் வெளிப்பட்டி ருக்கிறது.பார்வையற்ற ஒருவனுக்கு மற்றவர் களது உருவம் எப்படி தெரிகிறது என்பதை வசனத்திலேயே அற்புத மாக சொல்லியிருக் கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தி இருக்கிறார்கள். நடன இயக்குனராக இதுவரை எனக்கு ஆதரவு தந்து ஊக்குவித்தீர்கள், நடிகனாக முதல் அடியெடுத்து வைக்கி றேன் அதற்கு உங்கள் ஆதரவு தேவை.

*கதாநாயகி துர்கா பேசியதாவது*

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால் நான் திருமண ஆன பெண் என்று சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது. ரொம்ப சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவம். இப்படத்தில் வேறு பாத்திரத்துக்குத்தான் ஆடிஷன் செய்தேன். ஆனால் ஹீரோயின் வேடம் தந்தார்கள். ஆடிஷன் இல்லாமல்தான் நடித்தேன். இயக்குனர் தயாரிப்பாளர் உடன் நடித்தவர்கள் டெக்னீ ஷியன்கள் என்னை நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவ ருக்கும் நன்றி தெரிவித் துக்கொள்கிறேன்.

பெல் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் எல்லோ ருக்கும் பிடிக்கும்.

*கதை, வசனகர்த்தா வெயிலோன் பேசும் போது,*

இயக்குனர் வெங்கட் புவன் நானும் நண்பர்கள். தமிழர்கள் வரலாறு நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை தேர்வு செய்து இக்கதை அமைக்கப்பட்டது. இது சொல்லப்பட வேண்டிய கதை என்று தயாரிப்பா ளரும் சொன்னார். குருசோமசுந்தரம், மாஸ்டர் ஶ்ரீதர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ளனர். குறிப்பாக மறைந்த நிதிஷ் வீரா இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்ததை மறக்கவே முடியாது. அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து இதில் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் பீட்டர் ராஜ் முக்கிய பாத்திரம் நடித்தி ருக்கிறார். கிணற்றில் குதித்து நீச்சல் காட்சி யில் நடிக்க வேண்டும் என்றபோது உடனே நடிக்கிறேன் என்றார். ஆழமான கிணற்றில் குதிக்க தயாராக இருந்த வரிடம் சென்று உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்ட போது தெரியாது என்றார். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். நடிப்புக்காக உயிரை பணயம் வைக்கிறாரே என்று ஷாக் ஆகி.பிறகு அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து நீச்சல் காட்சியில் நடிக்க சொன்னோம். அவர் டைவ் அடித்து குதித்த பிறகு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் அவரை கிணற்றில் குதித்து காப்பாற்றினார்கள்” என்றார்.

*Cast* :

Guru Somasundaram as Guru Bramha
Sridhar Master as Bell 1
Nithish Veera as Bell 2
Petter raj as Kavin 2
Jack Arunachalam as Kavin 1
Sharmisha as Kalai 1
Durga as Kalai 2
Swetha Dorathy as Helen 1
Josephine as Helen 2

*Crew*

Direction: R.Vengat Bhuvan
Story & dialogue : Veyiloan
D.O.P: Bharanikannan
Editor : Thiyagarajan
Music director : Robert
Art Director : Natraj
Stunt : Fire Karthick
Lyricist: Petter raj
Choreography: Dina
Makeup: Ganapathi
PRO : Velu
Stills : Kumaresan
Publicity designs : Shabeer
Executive Producers : Krishna Kumar & Azhagar
DI colorist: Rakesh
Costume designer: Sivakarthik
Production Banner: Brogan Movies

*Cast* :

குரு சோமசுந்தரம் – குரு பிரம்மவாக
ஸ்ரீதர் மாஸ்டர் பெல் 1ஆக
நிதிஷ் வீரா – பெல் 2ஆக
பீட்டர் ராஜ் – கவின் 2ஆக
ஜாக் அருணாச்சலம் – கவின் 1ஆக
ஷார்மிஷா – கலை 1ஆக
துர்கா – கலை 2ஆக
சுவெதா டோராத்தி – ஹெலன் 1ஆக
ஜோஸ்பின் – ஹெலன் 2ஆக

*Crew*

இயக்குனர் : R.வெங்கட் புவன்
கதை & வசனம் : வெயிலோன்
ஒளிப்பதிவாளர் : பரணிக்கண்ணன்
Editor : தியாகராஜன்
இசை : ராபர்ட்
கலை இயக்குனர் : நட்ராஜ்
சண்டை : Fire கார்த்திக்
பாடலாசிரியர் : பீட்டர் ராஜ்
நடனம் : தீனா
சிகை அலங்காரம் : கணபதி
PRO : வேலு
புகைப்படம் : குமரேசன்
விளம்பர வடிவமைப்பு : ஷபீர்
நிர்வாக தயாரிப்பாளர் : கிருஷ்ணகுமார் & அழகர்
DI வண்ணமயமானவர் : ராகேஷ்
ஆடை வடிவமைப்பாளர் : சிவகார்த்திக்
தயாரிப்பு பதாகை : ப்ரோகன் மூவிஸ்