பூமி படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.
ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி – இயக்குநர் லட்சுமண் கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பூமி.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.
வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம், அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் பிறந்த நாளில் இப்படம் திரைக்கு வருகிறது.
இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமண் கூறியிருப்பதாவது: விவசாயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நாசா விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் பூமி படக்கதையாம்.