” யுவனுக்கு, பிளாக்ஷிப் மற்றும் SNS மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ் ”
தொடர்ந்து இணையத்தில் பல சாதனைகளை படைத்து விரைவில் சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாறவிருக்கும் பிளாக்ஷிப் நிறுவனமும் , கல்வி உலகில் கனவுப்புதுமைகளை அரங்கேற்றி 25வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின் வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் …
விரைவில் பிளாக்ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் “லவ் யூ யுவன்” எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது .. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை பார்க்க மட்டுமே அழைக்கப்பட்ட யுவனுக்கு , அவருக்காக காத்திருக்கும் இந்த உலக சாதனை முயற்சியே சொல்லப்படவில்லை என்பது அவருக்கு கூடுதல் ஆச்சர்யம், மகிழ்ச்சியைத் தரவே , ஆடிப் பாடி அதிரடித்தார் இசை இளவரசர் யுவன் சங்கர் ராஜா …
இதன்படி ஒரே நேரத்தில் 11,000 மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிப் பாடி சாதனை படைத்தனர் ..
இது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் , மற்றும் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களால் , உலக சாதனையாக உடனடியாக அங்கிகரிக்கப்பட்டது ..
இந்நிகழ்ச்சி அக்டோபர் 8, கோவை சரவணப்பட்டியில் SNS நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது … இதே நிகழ்வில் விரைவில் வெளிவரவிருக்கும் பிளாக் ஷிப் தொலைக்காட்சியின் லோகோ பிரம்மாண்டமாக யுவனால் அறிமுகப்படுத்தப்பட்டது …
பிளாக்ஷிப் டிவியின் விளம்பரங்களுக்கான பிராண்ட் அம்பாசிடராகிறார் வைகைப் புயல் வடிவேலு என்பதை தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டது .. இதுவே வடிவேலு அவர்கள் பிராண்ட் அம்பாசிடராக விளம்பரத்தில் களமிறங்கும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது ..
நிகழ்ச்சியின் கரு மற்றும் உருவாக்க வேலைகளை பிளாக்ஷிப் மேற்கொள்ள, வித்தியாசமான தனது ஈசி நடன அசைவுகள் மூலம் சினிமா நடன ஆசிரியர் அசார், இதை சாத்தியப்படுத்த , தங்களிடம் பயிலும் அத்தனை கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 11,000 மாணவர்களையும் ஒரு சேர தயார் செய்து ஆடவும் வைத்து அசத்தியது SNS கல்வி குழுமம்…
மேலும் டிசம்பர் 25 தூத்துக்குடி, டிசம்பர் 31 கோயம்புத்தூர், ஜனவரி 1 ,2023 திருச்சி ஆகிய ஊர்களில் யுவனின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அறிவிப்பினையும் வெளியிட்டது பிளாக்ஷிப் டிவி….
நிகழ்வினை, பிளாக் ஷிப் நிர்வாகிகளும் நடிகர்களுமாகிய சுட்டி அரவிந்த் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ் தொகுத்து வழங்கினர்.. மேலும் நரேந்திரபிரசாத் , அதிர்ச்சி அருண், அயாஸ், குட்டி மூஞ்சி விவேக் , டி.ஜே.சாம் பிரபா , என பிளாக்ஷிப்பின் பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டு மாணவர்களை கலகலப்பாக்கினர் ..
“யுவன் , பிளாக்ஷிப் இருவருமே இன்றைய வளரும் தலைமுறையினருக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் ..
அவர்களோடு சேர்ந்து இந்த சாதனையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது SNS கல்விக்குழுமம்.. இது மாணவர்களின் வெள்ளி விழா , ஆகையால் மாணவர்களோடே இன்னும் நிறைய கொண்டாட காத்திருக்கிறது SNS ” என்று சொன்ன சேர்மேனின் வாய்வழி டீசரோடு இனிதே நிறைவேறியது நிகழ்வு …
Blacksheep & SNS Group of Institution students gift world record surprise for Yuvan Shankar Raja
Blacksheep has been consistently creating new successful content, thereby marking a feat of accomplishment in cyberspace. Significantly, SNS Group of Institutions is now stepping into the 25th year of its successful educational venture. They together had prepared to offer a beautiful gift for Yuvan Shankar Raja’s silver jubilee year in the music industry by creating a new world record.
Blacksheep Satellite channel is all set for its telecasting soon is featuring a special show ‘Love you Yuvan’, which was shot recently. Yuvan Shankar Raja, who was informed that he would be meeting a large crowd of students was surprised that he wasn’t aware of the world record that was going to be created by them. Exhilarated by the scenario, Yuvan got pepped up and delivered a power-packed performance.
Accordingly, 11,000 students uniformly together performed singing and dancing for Yuvan Shankar Raja’s chartbuster song ‘Rowdy Baby’, thereby creating a new world record.
It has been now officially authenticated in the Indian Book of Records, Asian Book of Records, and World Book of Records.
The event was held on October 8, at SNS Institute of Arts and Science College ground, Saravanapatti, Coimbatore. During the same special occasion, Yuvan Shankar Raja unveiled the logo of the Blacksheep Satellite channel.
Yet another spectacular part of the event was Blacksheep announcing that Vagai Puyal Vadivelu will be the brand ambassador of this Blacksheep Satellite Channel. It is worth mentioning that this is the first-ever time Vadivelu has been signed up as a brand ambassador.
While Blacksheep ideated the concept and facilitated proper preparations, Dance Master Azhar, who shot to fame for his stylish dance moves in movies, choreographed this event with the SNS Group of Institutions letting 11,000 students in their educational institutions take part in this event to create a mind-blowing world record.
Furthermore, Blacksheep TV has officially announced that it will be hosting Yuvan Shankar Raja’s grand musical concert at Tuticorin on December 25 followed by Coimbatore on December 31 and Trichy on January 1, 2023.
The event was hosted by Blacksheep executives and actors Chutti Aravind and RJ Vignesh. Besides, eminent personalities from the Blacksheep team including Narendra Prasad, Shattam Arun, Ayas, Kutty Moonji Vivek, DJ Sam Prabha, and others graced the occasion and entertained the students.
The event concluded with SNS Group of Institutions, Chairman’s speech stating, “SNS Group of Institutions is elated to create this new world record by associating with big brand names like Yuvan Shankar Raja and Blacksheep that has been a great inspiration for the contemporary youngsters. This celebratory occasion is the silver jubilee of students. Hence, SNS will celebrate a lot more with the students.”