
ஓ மை டாக் விமர்சனம்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார். இந்நிலையில், டாக் (Dog) ஷோவில் பல வெற்றிகளை பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.
இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்...