Sasikumar and Simran starrer new film’s shoot to go on floors from October!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புரொடக்சன் நம்பர் 5
சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்
நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ...