
‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது.
நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப...