கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். நாயகன் செந்தில்நாதன் இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.
தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் ஊர்த்திருவிழாவில் செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? .என்பதே படத்தின் மீதிக்கதை
நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், படம் முழுவதும் வேட்டியுடன் கம்பீரமாக வருகிறார். மகள் மீது கொண்ட பாசத்தை ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார்.
பாண்டியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கையாண்டிருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கிறது மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்
குழந்தைகளின் எலும்பு மஜ்ஜையை வைத்து மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், எழுதி இயக்கியிருக்கும் சபரிநாதன் முத்துப்பாண்டி, முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்.