Monday, January 13
Shadow

சூ மந்திரகாளி – விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக அன்னக்கிளி வேலு தயாரிப்பில் ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சூ மந்திரகாளி’

பங்காளியூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்கிறார்கள். கதாநாயகன் கார்த்திகேயன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியகாரனை கூட்டி வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான பதுமையாக இருக்கும் கதாநாயகி சஞ்சனா புர்லினை பார்த்ததும், அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்துகிறார்கள். இறுதியில் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் மக்கள் திருத்தினார்களா இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே ‘ சூ மந்திரகாளி’

நாயகன் கார்த்திகேயன் வேலு கிராமத்து இளைஞராக வருகிறார். புதியவர் என்று சொல்லாத அளவுக்கு வருத்தம், காதல், நகைச்சுவை, கோபம் என்று அனைத்து உணர்வுகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தி அசத்துகிறார். நாயகி சஞ்சனா புர்லி பார்ப்பதற்கு அழகாகவும் அலட்டிக் கொள்ளாமல் தனக்குக்கொடுத்த வலையை சரியாக செய்திருக்கிறார்.

அருவி குருவியாக வரும் அந்த குழந்தை நட்சத்திரங்கள் நிரஞ்சனா , தனன்யா இருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். .ஊர்மக்களாக வரும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

முகமது ஃபர்கானின் ஒளிப்பதிவு மலை மற்றும் மலைசார்ந்த பகுதிகளும் அற்புதமாக படம்பிடித்து காட்டி இருக்கிறார். யதார்த்தம், அழகான காதல்,நகைச்சுவை என்று இப்படத்தின் கதையை இயக்கியிருக்கிறார் ஈஸ்வர் கொற்றவை அவருக்கு வாழ்த்துக்கள்

‘சூ மந்திரகாளி’ – அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்லபடம்.