ஏ.வி.எம் ஹெரிடேஜ் மியூசியம்
1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோஸ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது.
சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து இந்த நிறுவனம் விலகியுள்ளது. இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ்ராக்கர்ஸ்’ என்ற வெப் தொடரை ஏவிஎம் தயாரித்திருந்தது.
இந்நிலையில்,ஏவிஎம் ஸ்டூடியோஸின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.மேலும் ஸ்டூடியோவின் 3வது அரங்கில், ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக ஏவிஎம் நிர்வாகம் மாற்றியுள்ளது. இதில் அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன்.
இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில். ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் மக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு தலா ரூ. 200ம் சிறியவர்களுக்கு தலா ரூ150ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடபழனி ஏவிஎம் நிறுவனத்தில் உள்ள ஹெரிடேஜ் மியூசியம் செவ்வாய்கிழமை தோறும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.