Wednesday, September 27
Shadow

போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சி

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கும் நிகழ்ச்சியினை ஜெமினி மேம்பாலம் அண்ணா ரோட்டரி சிக்னல் அருகில் பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

கோடைகாலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

இதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் மோர் வழங்கும் நிகழ்ச்சியை பெருநகர காவல் ஆணையாளர் ஏ கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

மேலும் ஐந்து காவல் அதிகாரிகளுக்கு சுசுகி மோட்டார் நிறுவனத்தின் 5 சிறப்பு போக்குவரத்து சுற்றுக்காவல் இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறைக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

இந்த வாகனத்தில் மைக் ஒலிபெருக்கி ஒலி எழுப்பி உள்ளிட்ட அனைத்து சிறப்பம்சங்கள் உம்முடைய வாகனமாக இந்த வாகனம் ஜப்பான் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு இருசக்கர வாகனத்தின் மதிப்பும் இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தமாக 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாளும் காவல்துறையினருக்கு 5000 மோர் பாக்கெட்டுகள் வழங்கப்படும் இதற்காக ஒரு நாளைக்கு 24 ஆயிரத்து 750 ரூபாய் மொத்தமாக 30 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் அருண் ஐபிஎஸ், போக்குவரத்து இணை ஆணையாளர் எழிலரசன் ஐபிஎஸ், போக்குவரத்து இணை ஆணையாளர் ஜெயகௌரி ஐபிஎஸ், போக்குவரத்து காவல்துறை ஆணையாளர் மயில்வாகனன் ஐபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்பு பேசிய சென்னை பெருநகர ஆணையாளர் விசுவநாதன் சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் பங்கு மிக அதிக அளவில் இருக்கிறது குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கட்டாயம் தலைக்கவசம் அணிய சொல்வது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை சென்னை காவல் துறையினர் கட்டுப் படுத்தி இருக்கிறார்கள் என்றார்