மதுரை கோச்சடை அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்த திருமணத்தில் மிஞ்சிய சாப்பாடுகளை திருமண வீட்டார்கள் ரெட்கிராஸ் அமைப்பு உதவியுடன் எடுத்துக்கொண்டு உணவில்லாமல் தவித்தவர்களுக்கு சப்ளை செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் கொடுத்ததை போக மீதமுள்ள சாப்பாட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளுக்கும், உதவியாளர்களாக இருப்பவர்களுக்கும் எடுத்துச்சென்றனர். அங்கே கண்ட காட்சி மிகவும் வேதனையாக இருந்தது.காரணம் ஆயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் வரிசையில் நின்றனர். ஆனால் எடுத்து சென்ற சாப்பாடு பத்தவில்லை. ஆகையால் மனம் நொந்த திருமண வீட்டார் மீண்டும் இப்பொழுது இரவு சாப்பாடு தயார் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.