லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டரியா, 96 புகழ் கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.
இந்த படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து முன்பே அறிவித்திருந்தனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே மார்ச் 20 மற்றும் 27ம் தேதிகளில் வெளியாகவிருந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப் போயுள்ளன.
இந்த நிலையில் மாஸ்டர் ரிலீஸ் தேதியில் மாற்றமிருக்காது. ஏப்ரல் 9ஆம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளது.
ஒருவேளை நிலைமை சீராகி ஏப்ரல் 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட படங்களை வெளியிட வேண்டாமா..?
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கமும் மற்ற தயாரிப்பாளர்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா நிலைமை என்னவென்றே தெரியாமல் மாஸ்டர் திட்டமிட்டப்படி வெளியாகும் என்பது எவ்வளவு பெரிய சுயநலம்.? என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
விஜய்க்கு கேரளாவில் நல்ல மார்கெட் உள்ளது. அங்கே தான் கொரானாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
அப்படியிருக்கையில் தன் திரைத்துறை மீதும் மக்கள் மீதும் அக்கறையில்லாமல் மாஸ்டர் படக்குழுவினர் செயல்படலாமா? என்று பேசப்படுகிறது.
மாஸ்டர் படத்தை உலகமெங்கும் வெளியிட உள்ளனர். கொரோனா பீதியும் உலகளவில் இருந்து வருகிறது.
ஒருவேளை விஜய் படம் வெளியானால் நிச்சயம் அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரள்வார்கள். இதை கட்டுப்படுத்துவது விஜய்யின் கடமையல்லவா..?
தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களை விஜய் காப்பாற்ற வேண்டாமா?
இனியாவது மாஸ்டர் படக்குழுவினர் ரிலீஸ் தேதி குறித்து பேசாமல் மௌனம் காப்பதே நல்லது…