Friday, February 7
Shadow

Director KS Ravikumar starrer ‘U R Next’ commences shoot with pooja ceremony!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே ‘யூ ஆர் நெக்ஸ்ட்’.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.

முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,”இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது..இயக்குனர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

அடுத்ததாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி,”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

பின்னர் பேசிய இயக்குனர் ஷரீஃப்,”யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்றார்.

இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ‘கலைமாமணி’ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.

நடிகர்கள் :-

கே.எஸ்.ரவிக்குமார்
ரச்சிதா மகாலட்சுமி
உதயா
ஜனனி
தினேஷ்
திவ்யா கிருஷ்ணன்
அர்ஷத்
கேபிஒய் வினோத்
ரஃபி
‘புல்லட்’சமி

படக்குழு :-

தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி
எழுத்து & இயக்கம் : ஷரீஃப்
ஒளிப்பதிவு : கே ஜி ரத்தீஷ்
படத்தொகுப்பு : அஜித்
இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த்
கலை : வேணு
சண்டைப் பயிற்சி : ஓம்பிரகாஷ்
நடனம் : ‘கலைமாமணி’ ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்
படங்கள் : சக்தி பிரியன்
விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்

Director KS Ravikumar starrer ‘U R Next’ commences shoot with pooja ceremony!

‘U R Next’ is an upcoming film produced by Mohideen Abdul Qadar and Mani under the banner of Imak Films Pvt Ltd and Sky Frame Entertainment. The film is written and directed by MD Sharif which will mark his directorial debut.

The film is touted to be a horror that also focuses on the various problems surrounding the youth working in the IT industry. The film is being made as a Pan-Indian film that will be released in languages including Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi.

Team ‘U R Next’ is very confident about the script and is ready to give a new experience to Indian cinema fans through this film.

The film stars Director KS Ravikumar, Rachita Mahalakshmi, Udaya, Janani, Dinesh, Divya Krishnan, Arshath, KPY Vinod, Rafi, ‘Bullet’ Sami and others.

KG Ratheesh has been roped in to crank ithe camera. Ajith will be doing the editing. The film will also mark the debut of ‘Isai Pettai’ fame Vasanth as the music director.

The costumes will be designed by Eega Praveen and Venu will be doing the production design. Om Prakash has been roped in to direct the stunts, while Sridhar Master will be doing the dance choreography.

The shooting of the film commenced today with a pooja ceremony.

CAST:-

KS Ravikumar
Rachitha Mahalakshmi
Udhaya
Janani
Dinesh
Divya Krishnan
Arshad
KPY Vinoth
Rafi
‘Bullet’Sami

CREW:-

Production : Imak Films Pvt.Ltd., & Sky Frame Entertainment
Producer : Mohideen Abdul Qadar & Mani
Written & Direction : Sharif
Cinematography : K G Ratheesh
Editing : Ajith
Music : ‘Isaipettai’ Vasanth
Art : Venu
Stunt : Om Prakash
Choreography : ‘KALAIMAAMANI’ Sridhar
Costume Design : Eega Praveen
Stills : Sakthi Priyan
Publicity Design : Monic | Djinn Studios
Production Executive : Nandhakumar
PRO: Riaz K Ahmed