அண்மையில், B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார். MNM Films சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கும் இப்படத்தை, பிரபல YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் (எரும சானி புகழ்) இயக்கியுள்ளார்.
Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது…
திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தைத் வெளியிடுவது மிகச் சிறந்த தருணம் ஆகும். தமிழ் திரையுலகிற்கு அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது, மேலும் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளிப்யிட்டதில், எங்கள் படக்குழு மிகவும் உற்சாகத்தில் உள்ளது. படத்தினை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார்.
MNM Films நிறுவனம் சார்பில் அரவிந்த் சிங் கூறியதாவது…
பாண்டிராஜ் போன்ற முன்னணி இயக்குநர் எங்கள் “டி பிளாக்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் அனைத்து பணிகளு,ம் முடிந்த நிலையில், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.
இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டதாவது…
இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும், நேர்மறையான அதிர்வுகளைப் பெற்று வருவதால் எங்கள் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். B.சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம், திரைப்படத்தின் முழு உரிமைகளையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது பெருமையாக இருக்கிறது என்றார். இயக்குநர் விஜய்குமார் இப்படத்தில் அருள்நிதியின் நண்பராக நடித்துள்ளது பற்றி அவர் கூறுகையில்.., “அருள்நிதியுடன் படப்பிடிப்பில் இணைந்து நடித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது, அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக்கடினமான முயற்சிகளை மேற்கொண்டார். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால், அவர் 7 கிலோவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார் என்றார்.
அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். உமா ரியாஸ், தலைவாசல் விஜய், கரு பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் அரவிந்த் சிங் (ஒளிப்பதிவு), Ron Ethan Yohan (இசை), கணேஷ் சிவா (படத்தொகுப்பு), பிரதீப் தினேஷ் (சண்டைப்பயிற்சி), வீரமணி கணேசன் (கலை இயக்கம்), கௌசிக் கிருஷ் (பின்னணி இசை), ஞானகரவேல் (பாடல்), Sync Cinema ( ஒலி வடிவமைப்பு), Oliver Nathanel (ஸ்டைலிஷ்), முத்துவேல் (ஸ்டில்ஸ்), வாசு (ஒப்பனை), முருகன் (உடைகள்), Infinity Media (DI), சண்முக பாண்டியன் M (DI Colorist), G பாரதி(VFX), NXTGEN Studio (விளம்பர வடிவமைப்புகள் ), பவிதார் சிங் -அஸ்வின் சிங் (இணை தயாரிப்பு) பணிகளை செய்துள்ளனர்.