Saturday, October 12
Shadow

DISNEY+ HOTSTAR REVEALS THE FIRST LOOK OF ‘HANSIKA’S LOVE SHAADI DRAMA’

DISNEY+ HOTSTAR REVEALS THE FIRST LOOK OF ‘HANSIKA’S LOVE SHAADI DRAMA’

Chennai, January 18, 2023: One of Indian cinema’s most popular actresses, Hansika Motwani, broke a lot of hearts when she chose to wed her friend Sohael Khaturiya on December 4th last year at Jaipur’s Mundota Fort and Palace. Hansika and Sohael Khaturiya’s wedding was a grand affair that made headlines across the country.

Now, for the first time ever, fans will get a glimpse of the celebrations as Disney+ Hotstar brings to you the festivities, drama, and excitement as it happened behind the scenes, leading up to the dream day.

Hotstar Special show ‘Hansika’s Love Shaadi Drama’ will showcase everything that happened from the time the actress announced her decision to tie the knot with Sohael, as an army of wedding planners, designers and the families race against time to pull off a fairy tale wedding in just six weeks, that was truly spectacular in every sense of the word. Hansika and her family also address the scandal that surfaced prior to her wedding, which threatened to derail her dream day.

Disney+ Hotstar along with Hansika have revealed the first look of the Hotstar Specials show with the release date slated to be announced very soon.

About Disney+ Hotstar:

Disney+ Hotstar (erstwhile Hotstar) is India’s leading streaming platform that has changed the way Indians watch their entertainment – from their favorite TV shows and movies to sporting extravaganzas. With the widest range of content in India, Disney+ Hotstar offers more than 100,000 hours of TV Shows and Movies in 8 languages and coverage of every major global sporting event.

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது

சென்னை, ஜனவரி 18, 2023: இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி வெளியான போது பல இதயங்கள் உடைந்து போனது. ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளாக அறியப்பட்டது.

இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பின்னால் நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார்கள்.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ஷோ-வான ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ ஷோ, நடிகை ஹன்சிகா, சோஹேலுடன் தனது திருமண வாழ்க்கையை தொடர போவதற்கான முடிவை எடுத்த தருணத்தில் இருந்து, வெறும் ஆறு வாரங்களில் இப்படி ஒரு தேவதை திருமணத்தை நேரத்தை வென்று குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை, திருமண திட்டமிடுபவர்கள் தொடங்கி, வடிவமைப்பாளர்கள் மற்றும் குடும்பங்கள் வரை கூறும் அற்புதமான கதைகள் அடங்கிய ஒரு ஷோ-வாக இருக்கும்.

அதோடு, ஹன்சிகாவும் அவரது குடும்பத்தினரும் ஹன்சிகாவின் திருமணத்தை சுற்றி நடந்த அசௌகரியமான பிரச்சனையை பற்றியும் கூறுகிறார்கள். இது அவரது கனவு நாளை தடம் புரள செய்யும் அளவிற்கு எவ்வாறு அச்சுறுத்தியது என்றும் விளக்குகிறார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து ஹாட்ஸ்டார் சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர், வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது