நெல்லிக்காய், எலுமிச்சை, புரோக்கோலி, ஆரஞ்சு, திராட்சை, தக்காளி போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘வைட்டமின்-சி’ நிறைந்திருக்கிறது. இவற்றை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிலருக்கு இவை போதுமானதாக இருக்கும். ஆனால் ஒருசிலருக்கு ‘வைரஸ்’ தொற்றை எதிர்க்க கூடுதலான வைட்டமின்கள் தேவைப்படும்.
அதனால் ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த மருந்து-மாத்திரைகள், சாவன்பிராஷ் போன்ற லேகியங்களை டாக்டர்களிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பாராட்டுதலுக்கு உரியது.
அவற்றோடு, கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிரியான ‘வைட்டமின்-சி’ மருந்து-மாத்திரைகளை, மக்களுக்கு இலவசமாக கொடுக்கலாம். அரசு மருத்துவமனைகளிலோ, பொது இடங்களிலோ ‘வைட்டமின்-சி’ சத்து நிறைந்த ‘செலின் 500 எம்.ஜி.’ மற்றும் ‘எனார்சி 1000 எம்.ஜி.’ (நீரில் கரையக்கூடிய சத்து மாத்திரை) போன்ற மாத்திரைகளை இலவசமாக கொடுப்பதன் மூலம், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த முடியும். அதேசமயம் கொரோனா அச்சுறுத்தலை பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ளவும் முடியும். மேலும் ‘வைட்டமின் -சி’ சத்து மாத்திரைகள், மருந்து கடைகளில் எவ்வித தடங்கலின்றி கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிற்கு முன்வைக்கிறேன்.
நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் பலமானால், கொரோனா மட்டுமின்றி வேறு எத்தகைய வைரஸ் தாக்குதலும் நம்மை நெருங்காது. அதனால் ‘வைட்டமின்-சி’ சத்துப்பொருட்களை, அன்றாட உணவோடு சேர்த்து கொண்டால், நோய்கள் என்றுமே நம்மை நெருங்காது” என்ற கருத்தோடு விடை கொடுத்தார்.