Thursday, February 13
Shadow

டாக்டர் – விமர்சனம்

ராணுவத்தில் மருத்துவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் நாயகி பிரியங்கா மோகனை சந்தித்து காதல் வயப்படுகிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் நினைக்கிறார்கள்.பின்பு நிச்சயக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துகிறார் நாயகி பிரியங்கா மோகன்.

பிரியங்காவின் வீட்டிற்கு வந்து பேச வருகிறார் சிவகார்த்திகேயன். அச்சமயத்தில் பிரியங்காவின் அண்ணன் மகளான ஜாராவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. இதனை அறிந்த சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை தேடுகிறார்.இறுதியில் சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சிவகார்த்திகேயன், தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து விலகி வேறொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காட்டக் கூடிய படமாக இந்த படம் அமைந்துள்ளது. நாயகி பிரியங்கா மோகன், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் வினய். பல இடங்களில் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. யோகிபாபு, ரெட்டின் இருவரின் காமெடி படத்திற்கு பெரிய பலம். அர்ச்சனா, தீபா சங்கர், ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக செல்லம்மா பாடல் ரசிக்க முடிகிறது.
இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு

இயக்குனர் நெல்சன். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் நல்ல ஒரு கதை, நல்ல ஒரு ஹீரோ என இரண்டையும் கச்சிதமாக எடுத்து அதை நேர்த்தியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்

நடிப்பு: சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, இளவரசு, மிலிந்த் சோமன், தீபா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், ஜாரா வாஹித்,

இசை : அனிருத்

ஒளிப்பதிவு: விஜய்

தயாரிப்பு: சிவகார்த்திகேயன், கோட்டப்பாடி ஜே.ராஜேஷ்,
கார்த்திக் கண்ணன்

இயக்கம்: நெல்சன்