Sunday, October 13
Shadow

G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடல் வெளியீடு

Double Meaning Productions நிறுவனம், புதிய இசை லேபிள் நிறுவனம் மூலம் G.V. பிரகாஷின் “அடங்காதே” படத்தின் முதல் பாடலை வெளியிடுகிறது !

“சைக்கோ” படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, Double Meaning Productions நிறுவனம் சினிமாவின் மற்ற துறைகளிலும் கால் பதிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் தனது புதிய இசை லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளது. Double Meaning Productions நிறுவனத்தின் புதிய இசை லேபிள் மூலம் முதல் வெளியீடாக, G.V. பிரகாஷ் நடிப்பில், “அடங்காதே” படத்தின் பாடலை வெளியிடுகிறது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் இயக்குநர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…

சில திரைப்படங்களை தயாரித்தவன் என்கிற முறையில் ஒரு படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த நெருக்கத்தையும், படத்திற்கு மிகச்சிறந்த விளம்பரத்தையும் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் தான் Double Meaning Productions சார்பில், புதியதொரு மியூசிக் லேபிள் நிறுவனத்தை துவங்கியுள்ளோம். இந்நிறுவனத்தின் முதல் வெளீயீடாக, எங்கள் பெருமைமிகு படைப்பான “அடங்காதே” படத்திலிருந்து பாடலை வெளியிடுவது மிக மகிழ்ச்சி. இத்திரைப்படத்தை Sri Green Production நிறுவனம் தயாரிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் சார்பில் முதல் பாடலான “நீ இன்றி நானா” பாடலை வெளியிடும் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ், ஹரீஷ் கல்யாண், அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சேரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.