தமிழ் சினிமாதான் இந்திய அளவில் மிகவும் சிறந்து விளங்குகிறது அதற்க்கு காரணம் மிக தரமான படங்கள் தமிழில் மட்டும் வெளியாகிறது அதிலும் குறிப்பாக இதில் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் படங்களுக்கு கிடையாது குறிந்த செலவில் மனம் நிறைந்த புதிய முகங்கள் நடிக்கும் படங்களால் தான் ஒரு சில நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் படம் தான் தரமான படமாக வருகிறது . இந்த வார வெளியான மிக சிறந்த படம் ஏன் உலக சினிமாகளுடன் போட்டி போடும் சினிமா என்று கூட சொல்லலாம் அந்த ளவுக்கு ஒரு தரமான படம் குறிப்பாக கதை களம் அப்படியான ஒரு கதை இதுவரையாரும் தொட்டுவிடாத ஒரு புதுவித கதை நாட்டுக்கு முக்கிய கதை என்றும் சொல்லலாம் . அப்படியான ஒரு படம் தான் திரௌபதி
பெரிய நடிகர்களின் படத்துக்கு கோடி கணக்கில் அரங்கம் அமைக்கிறார்கள். இருந்தும் பிரமாண்டம் இருக்குமே தவிர அது தரமான படமாக இருக்காது இந்த படத்தின் செலவு மொத்தமே 50லட்சம் தான் துவும் கூட்
ஆணவக் கொலை, நாடகக் காதல் என சமூகத்தில் நடந்தேறும் கொடுமைகளை விவரிக்கிற, இவ்வகை கொடுமைகளை அரங்கேற்றுவது குறிப்பிட்ட சாதியினர் என வெளிச்சம்போட்டுக் காட்டுகிற முயற்சி’ என டிரெய்லர் மூலமும், படம் குறித்த செய்திகளின் மூலமும் அனைத்து தரப்பினரிடையேயும்ன்எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் தூண்டிவிட்டு, அதன்மூலம் சர்ச்சைகளில் சிக்கி, அதனாலேயே லோ பட்ஜெட் படங்களிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகிற படம் என்ற சாதனையையும் நிகழ்த்திக் காட்டியிருக்கிற தமிழ் சினிமா.
படம் என்ன எதிர்பார்ப்பை உருவாக்கியதோ அதையும் நிறைவேற்றியிருக்கிறது. அதையும் தாண்டி திருமணத்தை பதிவு செய்வதில் நடக்கும் முறைகேடுகளை தோலுரித்துக் காட்டியிருப்பது புதுசு.
தன்னுடைய வாழ்க்கைத் துணையையும் அவளது தங்கையையும் கொன்றுவிட்டதாக படத்தின் நாயகன் மீது பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. அதற்காக சிறை தண்டனையும் அனுபவிக்கிறான். இது கதையின் தொடக்கம்…
பின்னர் சிறையிலிருந்து வெளிவரும் நாயகன், தன் மீது குற்றம் சுமத்தியவர்களை, சம்பந்தப்பட்ட கொலைகளைச் செய்தவர்களை தேடிப்பிடித்து கதையை முடிக்கிறான். இது கதையின் முடிவு.
கொலைக்கான காரணம் என்ன? கொலையைச் செய்தது யார்? இந்த கேள்விகளுக்குப் பதிலாக விரிகிற காட்சிகளுக்கான திரைக்கதையில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை! இயக்கம்: மோகன்.G
நாயகன் ரிஷி ரிச்சர்ட் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப கம்பீரம் காட்டுவதாகட்டும், மனம் உடையும் காட்சியில் கண் கலங்குவதாகட்டும் நடிப்பில் கச்சிதம்.
நாயகி ‘திரெளபதி’யாக ஷீலா ராஜ்குமார். தேசிய விருதுபெற்ற டூ லெட்’ படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியவர் இதிலும் வாழ்ந்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நிஷாந்த். கதாபாத்திரத்துக்கேற்ப நடிப்பும் வரவில்லை. அவரது புள்ளிங்கோ’ ஹேர் ஸ்டைல் வித் தாடி கெட்டப் வேறு வெறுப்பேற்றுகிறது.
கருணாஸ், செளந்தர்யா, அம்பானி சங்கர் , ஜே.எஸ்.கே.கோபி, ஆறுபாலா என இன்னபிற நடிகர்கள், நடிகைகளின் நடிப்புப் பங்களிப்பும் நிறைவு.
படத்தின் கதை குறிப்பிட்ட சாதிகளை குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக காட்டுவதை நோக்கமாக கொண்டிருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லாமல் வசனங்கள் மூலம் கடத்தியிருப்பது புத்திசாலித்தனம். அப்படி காட்ட முற்பட்டிருப்பது சரிதானா? அவசியம்தானா? என்பதெல்லாம் விவாதத்துக்கு உரிய சங்கதிகள்.
பின்னணி இசை மூலம் கதையோட்டத்துக்கு உயிரூட்டியிருக்கும் ஜூபின் பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார்.
மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவுக்கு நேர்த்தி.
சாதி வெறி, ஆணவக் கொலை, நாடகக் காதல் என நகரும் கதையில் இயற்கை விவசாயம், கிராமங்களின் நிலத்தடி நீராதாரம், மண்வளம், கார்ப்பரேட் நிறுவனங்கள் திணித்திருக்கும் நுகர்வுக் கலாச்சார சுரண்டல் என சமூக விழிப்புணர்வு சங்கதிகளையும் கோர்த்திருப்பதற்காக இயக்குநருக்கு ஸ்பெஷல் பாராட்டு!
டு முயற்சியில் எடுக்கப்பட்ட ஒரு தரமான படம்
இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார் , கருணாஸ், நிஷாந்த் ருண் , சொந்தர்யா, சேசு ( , லெனா குமார், ஆறுபாலா, அம்பானி சங்கர் , ஜே.எஸ்.கே.கோபி , கோபி , இளங்கோ மற்றும் பலர் நடிப்பில் படத்தின் இசை ஜூபின் ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மோகன்.G