Sunday, October 13
Shadow

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “கானா பேட்டை”

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “கானா பேட்டை” நிகழ்ச்சி 150 எபிசோடை கடந்து வெற்றி நடை போடுகிறது .

கானா பாட்டுக்கு வட சென்னை தான் பூர்வீகம் . கானா பாடல் மற்றும் கானா பாடகர்கள் எப்படி உருவாகிறார்கள் ,கானா பாட்டிற்கு என்று தனி வாத்தியார்கள் இருக்கிறார்கள். கானா என்ற பெயர் எப்படி வந்தது. இப்படி கானாவின் வரலாறும், பல அறிய தகவல்களை சொல்லும் நிகழ்ச்சி தான் கானா பேட்டை.

இது வரை 200 மேற்பட்ட கானா பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது .இப்படி திறமையான கானா பாடகர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று சந்தித்து அவர்களின் கானா வாழ்கையின் அனுபவங்களையும், கலக்கலான கானா பாடல்களையும் பாடவைத்து ஆட்டம் போடவைக்கும் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

இந்த வார “கானா பேட்டை” யில் கானா நரேன் & கானா உசேன் பாடகர்களாக பங்கேற்க ,இந்நிகழ்ச்சியை V J  கானா சுரேந்தர் தொகுத்து வழங்குகிறார் .