மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கால் வீட்டில் தனிமையில் இருக்கும் ஜான்வி கபூர், தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு கடித்தத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
“ஊரடங்கால் நான் சாப்பிடும் உணவின் முக்கியத்தை அறிந்து கொண்டேன். எங்கள் வீட்டில் இருக்கும் அத்தியாவசிய உணவுகள் ஊரடங்கு முடியும் வரை இருக்குமா? என்று தெரியவில்லை. ஒருவர் மளிகை பொருட்கள் வாங்க உயிரை பணயம் வைத்து வெளியில் செல்வதை இதற்கு முன்பு நான் யோசித்து பார்த்தது கூட இல்லை. வாழ்க்கையில் சுயநலத்தோடும், பொறுப்பு இல்லாமலும் நான் இருந்ததை இந்த ஊரடங்கு எனக்கு உணர்த்தி இருக்கிறது. ஊரடங்குக்கு முன்னால் எனது தந்தையின் பாசத்தை அறியாமல் இருந்தேன். எங்களுக்காக வீட்டில் காத்திருப்பதையும் யோசிப்பது இல்லை.
இப்போது அவருடனேயே இருக்கும் தருணங்களில் அவற்றை யோசித்து பார்க்கிறேன். வீட்டில் உள்ளவர்களை கவனிக்க வேண்டும். அவர்களின் ஆரோக்கியம் எனக்கு முக்கியம் என்று உணர்ந்து இருக்கிறேன்”.