எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்” .“(It’s Just a beginning )இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது .
இதில் ஜாகுவார் தங்கம் (President – Guild) நடிகை அஸ்மிதா ,கஞ்சா கருப்பு ,தளபதி தினேஷ் ,நடிகை சிந்து ,நடிகை காயத்ரி,நடிகர் கோதண்டம், இயக்குனர் செந்தில் நாதன் ,அசோக் ,இயக்குனர் திருமலை ,இயக்குனர் பிரகாஷ் ,தயாரிப்பாளர் மஹாலக்ஷ்மி ,மற்றும் இப்படத்தின் இயக்குனர் எம்.ஜெரோம் சேவியர்,ஒளிப்பதிவாளர் பிரவீன்,இசையமைப்பாளர் வசந்த் ,தயாரிப்பாளர் K.R குணா படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .குறுந்தகடை இயக்குனர் செந்தில் நாதன் வெளியிட நடிகை அஸ்மிதா பெற்றுக்கொண்டார் .