Saturday, October 5
Shadow

Janhvi Kapoor is all set to make her Telugu debut with NTR 30, makers officially announced referring her as calm in the storm.

Janhvi Kapoor is all set to make her Telugu debut with NTR 30, makers officially announced referring her as calm in the storm.

NTR is reuniting with Koratala Siva for NTR 30 after Janatha Garage. Ever since the project was officially announced, fans have taken over social media demanding updates on the film. The project is expected to be officially launched later this month and will go on the floors immediately after that. Koratala Siva currently continuing with the pre-production works on the film.

Today makers surprised fans with a breezy update. Makers announced that Janhvi Kapoor is playing the female lead in the film with a striking poster, wishing her happy birthday. Makers wrote, “She’s the calm in the storm from the fierce world of #NTR30. Happy Birthday and welcome onboard #JanhviKapoor”

The actress referred to the RRR actor as a legend and expressed her desire to work with NTR soon. This exciting combination is now ready to entertain the audience. NTR 30 is not just high on action but also has strong shades of emotions making it a perfect follow up for NTR after RRR.

Mikkilineni Sudhakar and Hari Krishna K bankrolling the film under the banners of Yuvasudha Arts and NTR Arts. Sreekar Prasad is the editor of the project. Ratnavelu is handling the cinematography and production design will be handled by Sabu Cyril. Nandamuri Kalyan Ram presenting this highly anticipated action entertainer.

Rockstar Anirudh is scoring music for this mega biggie. Fans expecting a chartbuster album. The film will be releasing worldwide on April 5th, 2024.

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். படத்தில் புயலுக்கு நடுவே அமைதி போன்றவர் ஜான்வி என அவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது

’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன் என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. கொரட்டாலா சிவா தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இன்று படக்குழு பார்வையாளர்களுக்கு படம் குறித்தான அப்டேட் கொடுத்துள்ளது. ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும் “#NTR30-ன் பரபரப்பான உலகத்தில் அடிக்கும் புயலில் அமைதியான ஒரு மலர் போன்றவர் ஜான்வி. பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஜான்விகபூரை வரவேற்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

’ஆர்ஆர்ஆர்’ நடிகரான என்.டி.ஆரை ஒரு ஜாம்பவான் என்று குறிப்பிட்டு, சீக்கிரமே இந்தப் படத்தில் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இருப்பதை ஜான்விகபூர் தெரிவித்தார். இந்த ஜோடி இப்போது திரையில் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர். ‘என்டிஆர் 30’ ஆக்‌ஷன் மட்டுமல்ல, பல உணர்ச்சி மிகுந்த தருணங்களையும் படத்தில் கொண்டுள்ளது. ’ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு என்டிஆர்-க்கு அடுத்த ஒரு சரியான படமாகவும் இது அமையும்.

யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனர்களின் கீழ் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை சாபு சிரில் கையாள்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஆக்‌ஷன் எண்டர்டெய்னரை நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார்.

இந்த பிரம்மாண்டமான படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சார்ட்பஸ்டர் ஆல்பத்தை இதில் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 5, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.