Monday, October 14
Shadow

ஜெயா தொலைக்காட்சியில் ‘சாய் வித் செலிப்ரிட்டி’

முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஜெயா டிவி தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருகிறது.அந்த வரிசையில் இப்போது ‘சாய் வித் செலிப்ரிட்டி’ எனும் புதிய நிகழ்ச்சியும் இணைந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில்  ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகள் உள்ளன, 12 வித்தியாசமான டீ களுடன் ஒரு டீ பார்ட்டி உடன் முதல் சுற்று ஆரம்பமாகிறது .முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க  மற்றும் விருந்தினர்களுக்கு  இன்ப அதிர்ச்சி அளிக்க நகைச்சுவை மன்னர்கள் அடிக்கும் லூட்டி உடன் அட்டகாசம் நிறைந்த இரண்டாம் சுற்று காத்திருக்கும். எதிர்பாராத கேள்விகளுடன் மூன்றாவது சுற்று அமைந்து இருக்க. இந்த நிகழ்ச்சியை RJ.அஜய் தொகுத்து வழங்குகிறார்.