Tuesday, December 3
Shadow

“Joshua Imai Pol Kaakha will be an impeccable treat for the action lovers” – Actor Varun

“ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது. அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.’ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி,
எடிட்டிங்: ஆண்டனி,
இசை: கார்த்திக்,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆடைகள்: உத்தாரா மேனன்,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா,
ஆக்‌ஷன்: யானிக் பென்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,
கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.

“Joshua Imai Pol Kaakha will be an impeccable treat for the action lovers” – Actor Varun

Actor Varun has dedicated years to pursuing his stardom, fearlessly taking on diverse roles regardless of screen time. From portraying a romantic lead to playing significant characters in numerous films, he has finally discovered his calling as an action-packed hero in his upcoming movie ‘Joshua Imai Pol Kaakha’, directed by the esteemed Gautham Vasudev Menon. This highly anticipated film is set to release worldwide on March 1, 2024.

Expressing his gratitude, Actor Varun states, “I couldn’t have asked for more. It’s a dream come true for any aspiring actor to collaborate with a renowned director like Gautham Vasudev Menon sir. While everyone desires to experience the romantic essence of playing a breezy protagonist in his movies, I was pleasantly surprised when he envisioned me as an action hero. Working with him has been an absolute blessing, and I’ve had countless fanboy moments on set. I used to admire matinee idols like Suriya sir, Ajith sir, and Kamal sir in awe as they flexed their muscles in his movies. It was truly an incredible experience for me to step into an action-packed role for this film. ‘Joshua Imai Pol Kaakha’ will undoubtedly be a treat for action enthusiasts. The exceptional work of Action Director Yannick Ben and his team can be witnessed in every frame. I would also like to extend my gratitude to my co-stars Raahei, Krishna, and others for their unwavering support.”

‘Joshua Imai Pol Kaakha’ is a film written and directed by Gautham Vasudev Menon and produced by Dr. Ishari K Ganesh of Vels Film International. Raahei portrays the female lead role in this movie, while Krishna takes on the role of an antagonist for the first time in his career.

Technical Crew

Cinematography : SR Kathir ISC
Editing : Anthony
Music : Karthik
Art Director : Kumar Gangappan
Costumes : Uthara Menon
Lyrics : Madhan Karky, Vivek, Vignesh Shivan, Super Subu, Gana Guna
Action : Yannick Ben
Executive Producer : K Ashwin Kumar
Colorist : G Balaji
Sound Design : Suren G & Alagiakoothan
Sound Mixing : Suren G