Thursday, April 18
Shadow

காஜல் அகர்வால் வெளியிட்ட பெண்களுக்கெதிரான அநீதியை கண்டிக்கும் பாடல்

 

One clan எனும் பெயரில் சிங்கப்பூரை சேர்ந்த பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் இணைந்து பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து பாடல் இசை வீடியோ ஒன்றை தாயாரித்துள்ளார்கள்.

JK சரவணா மற்றும் அவரது Tantra Studios இணைந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளை செய்துள்ளார்கள். சமூகத்திற்கு தேவையான அழுத்தமான கருத்தை சொல்லும் இந்த வீடியோவிற்கு Wish a Smile Foundation மற்றும் #IKilledSucide Movement ஆதரவளித்துள்ளார்கள்.

 

Wish a Smile Foundation உறுப்பினர் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும்  காஜல் அகர்வால் தங்கள் Facebook மற்றும் Twitter தளங்களில் இந்த வீடியோ பாடலை மார்ச் 18  அன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளார்.

பெண் வன்முறைக்கெதிரான தமிழ் ஹிப் ஹாப் வீடியோ பாடல் உலக ரசிகர்களை கவரும்படி அமைந்துள்ளது.