கலைஞர் தொலைக்காட்சியின் ஒரு அங்கமாக இருக்கும் முரசு தொலைக்காட்சி முழுமையான சினிமா சேனலாக மாறியிருக்கும் நிலையில், 24 மணிநேரமும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி மக்களை மகிழ்வித்து வருகிறது.
இந்த நிலையில், “சினிமா எனும் பூதம்” என்கிற தலைப்பில் அந்த வார ஸ்பெஷலாக ஞாயிறுதோறும் காலை 8:30 மணிக்கு திரை நட்சத்திரம் ஒருவர் பற்றிய சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பாகி வருகிறது.
எழுத்தாளர் ஆர்.பி.ராஜநாயஹம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நட்சத்திரத்திரத்தை தேர்வு செய்து, அவர்கள் கடந்து வந்த பாதை, அவர்களின் வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறுகிறது.