Wednesday, January 15
Shadow

கலைஞர் தொலைக்காட்சியின் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை முன்னிட்டு 2 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள், சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 14 காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், கலகலப்பான “சிறப்பு பட்டிமன்றமும்”, காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் பங்கேற்று அசத்தும் “டாக்டர்” பட ஸ்பெஷல், “தாறுமாறு நம்ம ஸ்டாரு” சிறப்பு நிகழ்ச்சியும், பகல் 11.30 மணிக்கு “அரண்மணை 3” படக்குழுவினர் பங்குபெறும் கலகலப்பான சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

மதியம் 1.30 மணிக்கு யோகி பாபுவின் கலக்கல் காமெடியில், “பேய் மாமா” காமெடி திகில் சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 15, காலை 9 மணிக்கு “நம்ம வீட்டு நட்சத்திரம்” சிறப்பு நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணிக்கு மம்முட்டி முதலமைச்சராக கலக்கிய “ஒன்” சிறப்பு திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.