கலைஞர் டிவி குழுமத்தில் ஒன்றான முரசு டிவி, முழுமையான மூவி சேனலாக மாறியிருக்கிறது. இனி ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை தினமும், காலை முதல் இரவு வரை முழுக்க முழுக்க படங்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது.
ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை மார்னிங் ஸ்பெஷல் “காவியக் காலை”, டைட்டில்ல பழமையும், புதுமையும் கலந்த கலர்புல்லான ஸ்பெஷல் மூவிஸ் போடுறாங்க.
திங்கள் – சனிக்கிழமை வரை மதியம், “கிளாசிக் மேட்னி” தலைப்புல காமெடி, காதல், ஆக்ஷன்னு மிக்ஸ்டு மூவீஸ் முழுவதும் ஒளிபரப்பாக இருக்கிறது
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, பகலில் “மகளிர் மட்டும்” டைட்டில்ல, லேடீஸ் ஸ்பெஷல் மூவிசும், “முரசு சன்டே சரவெடி” டைட்டில்ல மதியத்துல இருந்து நைட் வரை அடுத்தடுத்து சூப்பர்ஹிட் மூவிசும் ஒளிபரப்பாகி வருது.
அதேமாதிரி, ஒவ்வொரு நாள் நைட்டும் சூப்பர்ஹிட் மூவீசும், ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் திகில் படமும் பட்டைய கிளப்பப் போகுது.
முரசு டிவியோட இந்த முழுமையான பொழுதுபோக்கை தினமும் பார்த்து மகிழுங்கள்.