Wednesday, October 5
Shadow

முரசு டிவியின் மூவி மேனியா அனைத்து வயதினரையும் கவரும் முரசு டிவி திரைப்படங்கள்

கலைஞர் நெட்வொர்க்கில் ஒரு அங்கமாக இருக்கும் முரசு தொலைக்காட்சியில்  24 மணிநேரமும் திரைப்படங்கள் ஒளிரப்பாகி வருகிறது.

திங்கள் முதல் வியாழன் வரை காலை 11:00 மணிக்கு “காவியக் காலை” தலைப்பில் 90-களில் ஹிட்டடித்த படங்களும், மதியம் 3:00 மணிக்கு “கிளாசிக் மேட்னி” தலைப்பில் 80-களில் வெற்றிநடை போட்ட படங்களும், மாலை 6:00 மணிக்கு “சூப்பர் ஹிட் ஷோ” தலைப்பில் காதல், காமெடி, குடும்பம் என அனைத்தும் கலந்த சூப்பர்ஹிட் திரைப்படங்களும், இரவு 9:00 மணிக்கு “முரசு நைட் ஷோவில்” மனதை மயக்கும் மிக்ஸ்டு திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதேபோல், வெள்ளிதோறும் மாலை 6:00 மணிக்கு “வெள்ளிப்பரிசு” தலைப்பில் மாஸான அதிரடி திரைப்படங்களும், சனிக்கிழமை பகல் 12 :00மணி மற்றும் மதியம் 3:00 மணிக்கு “சூப்பர் சர்டடே” தலைப்பில் இளம் வயதினரை கவரும் சிறப்பு படங்களும், மாலை 6:00 மணிக்கு அந்த வார ஸ்பெஷல் மூவிசும் திரையிடப்படுகின்றன. சனிதோறும் இரவு 9:00 மணிக்கு “காதல் பரிசு” தலைப்பில் காதல் திரைப்படங்கள் மட்டும் ஒளிபரப்பாகும்.

ஞாயிறு அன்று, பகல் 12:00 மணிக்கு “மகளிர் மட்டும்” தலைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய படங்களும், மதியம் 3:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு “சன்டே சரவெடியாக” அடுத்தடுத்து சூப்பர்ஹிட் திரைப்படங்களும், ஞாயிறுதோறும் இரவு 9:00மணிக்கு திகில் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. அனைத்து வயதினரையும் கவரும் முரசு தொலைக்காட்சியின் சிறப்பு திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.