கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “தெய்வமகள்”தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையில், பிரகாஷை திருமணம் செய்துகொள்ளும் சத்யா வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து இந்த கதையை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் குமரன்.
200 அத்தியாயங்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் தற்போது, சத்யாவுடனான மனஸ்தாபத்தால் அவரை பிரிய முடிவெடுக்கிறார் பிரகாஷ். சத்யாவிடம் விவாகரத்து கேட்கும் பிரகாஷ், தனது முடிவை மாற்றிக் கொள்வாரா? அல்லது இருவரும் பிரியும் சூழல் உருவாகுமா? என்பதற்கு பதில் வரும் வாரங்களில் தெரியும் என்பதால் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
“தெய்வமகள்”நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:00 மணிக்கு ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் சத்யாவாக (வாணி போஜனும்), பிரகாஷாக (கிருஷ்ணாவும்), அண்ணியார் காயத்ரியாக வில்லி வேடத்தில் (ரேகா கிருஷ்ணப்பாவும்) நடித்துள்ளனர்.