Sunday, October 13
Shadow

சற்குணம் ஆட்டம் ஆரம்பம் – அதிரடி காட்டும் ‘நாயகி’ நெடுந்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் விகடனின் “நாயகி” நெடுந்தொடருக்கு தமிழ் மக்களிடையே ஏகோபத்திய வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில், தனது தந்தையின் உண்மையான குணத்தை அறிந்து கொண்ட திருமுருகன், அவரை எதிர்க்க தொடங்குகிறார். அதே வேளையில், திருமுருகனுக்கும், ஆனந்திக்கும், சற்குணம் தலைமையில் திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்த திருமணத்தை நிறுத்த, கலிவரதன் பல்வேறு தடைகளை உருவாக்க, அந்த தடைகளை தகர்த்தெறியும் சற்குணம், திருமுருகன் – ஆனந்தி ஜோடிக்கு எப்படி திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்பது வரும் வாரங்களில் தெரிய வரும் என்பதால் தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியிருக்கிறது.

இந்த தொடரில் திருமுருகனாக (திலீப் ராயனும்), ஆனந்தியாக (வித்யா பிரதீப்பும்), சற்குணமாக (அம்பிகாவும்), கண்மணியாக (பாப்ரி கோசும்), கலிவரதனாக (சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியும்) நடித்துள்ளனர்.